என் மலர்tooltip icon

    வேலூர்

    • 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ெநரிசல்
    • வாகன ஓட்டிகள் கடும் அவதி

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா சோதனைசாவடியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகள் தங்கள் ஊருக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்பி பணிக்கு செல்கின்றனர். இதனால் வானங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து பாதிக்கிறது.

    அதன்படி வேலூரில் இருந்து ஏராளமான வானங்கள் நேற்று வந்தது.

    வழக்கம் போல் நேற்றுசோதனை சாவடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சோதனைசாவடியை கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • வேலாடும் தணிகை மலையில் நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கெங்கநல்லூர் ஊராட்சி மூலைகேட், தார்வழி அருகே 1000 அடி உயரமுள்ள மலைமேல் அமர்ந்து இருக்கும் வேலாடும் தணிகை மலை பால முருகன் கோவில் அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை பெருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகின்றன. அதே போல் இந்த ஆண்டு வரும் மாதம் 8, 9-ந் தேதிகளில் ஆடிக்கி ருத்திகை திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய் வதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பாலமுருகன் கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பால முருகன் கோவில் அறக்கட் டளை நிர்வாக தலைவர் எஸ்.பி.கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் குமார், துணைசெயலாளர் பாலு, துணை பொருளாளர் சங்கர், நிர்வாக குழு உறுப் பினர்கள் சீனிவாசன், ராஜாராம், வெங்கடேசன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் செல்வ ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும். மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் எழுத்தர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    • 12 அணிகள் ஆன்லைன் மூலம் பதிவு
    • வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் பரிசாக அறிவிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட அளவில் குடியாத்தத்தில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் போல் குடியாத்தத்திலும் நடத்த வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் என்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் இன் நிறுவனர் பி.கமல்ராஜ், குடியாத்தம் டிஜிட்டல் டெலிவரி சேர்ந்த சதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் இணைந்து இந்த குடியாத்தம் கிரிக்கெட் பிரிமியர் லீக்கில் வீரர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கினர்.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது இந்த குடியாத்தம் பிரீமியர் லீக்கில் விளையாட 370 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    அந்த வீரர்கள் விளையாடிய போட்டிகள் எடுத்த ரன்கள் எடுத்த விக்கெட்டுகள் சராசரி அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு அணிக்கு பதினைந்தாயிரம் புள்ளிகள் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் 11 விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்ந்தெடுக்கலாம் கேப்டன், துணைகேப்டன் மற்றும் இருவர் என ஒரு அணிக்கு 15 பேர் என 180 பேர் தேர்வு செய்யும் பணிகள் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    வீரர்கள் ஏலம்

    ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் ஏலத்தொகை எந்த வகையில் நடைபெறுமோ அதே போல் வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் கேப்டன் மற்றும் மேலாளர் அமர்ந்து கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் அதிகப்பட்சமாக விஜயகாந்த் என்ற வீரர் 5 ஆயிரத்து நூறு புள்ளிகளும் சிலம்பரசன் என்பவர் 4600 புள்ளிகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    ஏலத்தில் எடுக்கப்பட்ட அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அணிகள் இருக்கும் இந்த ஆறு அணிகளில் மோதும் இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் விதிமுறைகளில் நடத்தப்படும் அதேபோல் எலிமினேட்டர் வழியில் இறுதிப்போட்டி நடைபெறும் என தெரிவித்தனர்.

    இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் பரிசாகவும் 30 ஆயிரம் இரண்டாம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்களுக்கு டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் வழங்கப்படும் போல் வண்ண வண்ண சீருடைகள் வழங்கப்படும்.

    அதே விதிமுறைகளை பயன்படுத்தி குடியாத்தத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் ஆகஸ்ட் 15 முதல் இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை இந்த போட்டிகள் நடைபெறும் இது முதல் ஆண்டு என்பதால் ஏலத்தொகை வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

    வரும் ஆண்டுகளில் வீரர்களுக்கான ஏலத்தொகை குறித்து விவரங்கள் வெளியிடப்படும் மேலும் குடியாத்தத்தில் உள்ள சிறந்த வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் பெயர்களில் அணிகள் பதிவு செய்யப்பட்டு வரும் ஆண்டுகளில் மிகச் சிறந்த போட்டிகளாக குடியாத்தம் பிரிமியர் லீக் செயல்படும் என இந்த போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கமல்ராஜ், சதீஷ்குமார்முத்துக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    குடியாத்தத்தில் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போல் வீரர்களை தேர்வு செய்த நிகழ்ச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆலாம்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். இவரது மகள் பூவிகா (வயது 13). ஒலக்காசி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார் .அப்போது கழிவறை அருகே பதுங்கி இருந்த பாம்பு அருகே தெரியாமல் சென்று விட்டார்.

    அப்போது பாம்பு மாணவியை கடித்தது. இதனால் அலறி கூச்சலிட்டார்.

    அங்கு சென்ற ஆசிரியர்கள் மாணவியை மீட்டனர். உடனடியாக மாணவியை குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

    அரசு பள்ளியில் பாம்பு வரும் அளவிற்கு புதர் மண்டி இருந்ததா அல்லது வெளியே இருந்து பாம்பு வந்ததா என கேள்வி எழுப்பி உள்ளனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
    • திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. குருமலை அடுத்துள்ள அணி மலை கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த மலை கிராமத்தின் நாட்டாமையாக சேகர் என்கிற சங்கர் உள்ளார். இவரது அண்ணன் மகனின் திருமணம், அணி மலையில் நேற்று நடைபெற இருந்தது.

    இதற்காக நாட்டாமை சங்கர் தனது குடும்பத்தினருடன் திருமண விழாவிற்கு தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக கடந்த 5-ந்தேதி ஊசூர் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்த தனிப்படை போலீசார், சங்கரை மடக்கி அரியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சங்கர் மீது சாராயம் காய்ச்சி விற்றதாக வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள், எங்கள் வழக்கப்படி திருமணத்தின்போது நாட்டாமை தான் மணமகனிடம் தாலி எடுத்து கொடுப்பார். அப்போது தான் திருமணத்தை நடத்த முடியும்.

    எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் சங்கரை விடுவிக்கவில்லை.

    இதற்கிடையில் அத்தியூர் ஊராட்சி தலைவரும், அணி மலை மக்களும் சேர்ந்து நாட்டாமை சங்கரை திருமணத்துக்கு ஜாமீனில் அழைத்து வர முயற்சித்தனர். ஆனால் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

    இதனால் மலை கிராம வழக்கப்படி மணமகன் கையில் தாலி எடுத்து கொடுக்க நாட்டாமை இல்லாத நிலையில் நேற்று நடைபெற இருந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் நிறுத்தி விட்டனர்.

    திருமணம் நின்று போனதால் மலைவாழ் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் சென்றனர்
    • அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    காட்பாடியில் புதிய பிரியாணி கடை திறப்பு விழா சலுகையாக ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

    வேலூர் காட்பாடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி மீன் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்நிலையில் காட்பாடி ஆஸ்கார் தியேட்டர் எதிரில் தம்பி பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.

    அதன் துவக்க விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவச என அறிவித்தனர்.

    இதனால் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர். காட்பாடி சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடைக்கு சென்று பிரியாணி வாங்கினர்.

    கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.

    கடை திறப்பு விழா சலுகையாக 1 பிரியாணி வாங்கினால் மற்றொரு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டதால் ஆவலுடன் பிரியாணி வாங்க வந்ததாக அசைவ பிரியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர், கஸ்பா பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி லலிதா (வயது 58).

    கடந்த மாதம் 16-ந் தேதி லலிதா வீட்டில் தீபம் ஏற்றுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது.

    தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. லலிதா வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து லலிதா உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர் :

    வேலூர் அடுத்த மேட்டு இடையம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). கட்டிட தொழிலாளி. உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த மணிகண்டனை பல்வேறு டாக்டர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் அங்குள்ள அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மணிகண்டன் குடும்பத்தார் பாகாயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மணிகண்டன் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றியம் சார்பில் கலைஞரின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா சாதனையை முன்னிட்டு ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம் ஆகிய ஊராட்சிகள் இணைந்து கரடிகுடியில் உள்ள சந்தைமேடு பகுதியில் மாபெரும் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேவிசெட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்ஜோதி மணிமாறன், கரடிகுடி ஊராட்சி மன்ற தலைவர் சி.கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மணிமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    தமிழ்நாடு முதல்வரின் இந்த ஆட்சியில் அணைக்கட்டு தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தார் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நான் பல முறை பேசி அணைக்கட்டு பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்திற்கு தார் சாலை வசதி ஏற்படுத்தியுள்ளேன்.

    மக்களுக்காக இரவும், பகலும் அயராது பாடுபடும் ஒரே தலைவர் நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். இந்த ஆட்சியில் மட்டும் தான் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தையே மாற்றியுள்ளது. மாணவிகளுக்கு ஊக்க தொகை, குடும்ப தலைவிக்கு உரிமை தொகை, இலவச பஸ் கண்டனம் என சொல்லி கொண்டே போகலாம் என்றார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரபாண்டியன், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் உட்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரசு நன்றி கூறினார்.

    • இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.
    • அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டுவோம். என்பது கர்நாடகா அரசின் ஆசை, ஆனால் அவர்களுக்கு உரிமை கிடையாது. அணையை கட்டக்கூடாது என சொல்வதற்கான உரிமை நமக்கு உண்டு.

    காரணம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கபினிக்கு கீழே 80 டிஎம்சி தண்ணீர் இயற்கையாக நமக்கு வருகிறது. இயற்கையாக வரும் இடத்தில் அணையை கட்டுவது என்பது உகந்தது அல்ல.

    2-வது அவர்கள் அணையை கட்டிட முடியாது, காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்க வேண்டும், பிறகு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்குப் பிறகும் கட்ட வேண்டியிருந்தால் நீதிமன்றம் செல்ல வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளது.

    அரசியலுக்காக அவர்கள் கட்டியே தீருவோம் என்பார்கள் நாங்கள் கட்ட விட மாட்டோம் என்போம். அவ்வளவுதான். அணை கட்ட முடியாது. அதனை கட்ட நாங்கள் விட மாட்டோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கனிம வளத்தில் சுமார் ரூ.1300 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தினார்கள். நாங்கள் அதை நிரப்பி தற்போது 1600 கோடி ரூபாய் லாபத்தை காட்டியிருக்கிறோம்.

    ரூ.1000 உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என எழுதி கொடுக்க சொல்லுங்கள். அதை நான் கவனிக்கிறேன், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

    வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் குகையநல்லூர், அரும்பருதி, பொய்கை கோவிந்தம்பாடி, பரமசாத்து உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பணை கட்டப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடை பயிற்சி செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்
    • அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே பல லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பூங்காவிற்கு அழைத்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் காலை, மாலை நடை பயிற்சி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்லும் பகுதியில் பெரிய மரம் ஒன்று பட்டு போய் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் நடை பயிற்சி செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    பொதுமக்கள் மீது மரம் முறிந்து விழுந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு கொணவட்டத்தில், மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து கிடந்தது. இதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

    அதன்படி பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

    பணிகள் நடந்து முடிந்த நிலையில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது.

    32-வது வார்டு கவுன்சிலர் சாஜிகா தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்து கொண்டு, பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

    அதேபோல் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ×