என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொணவட்டத்தில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி
- கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு கொணவட்டத்தில், மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து கிடந்தது. இதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
பணிகள் நடந்து முடிந்த நிலையில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது.
32-வது வார்டு கவுன்சிலர் சாஜிகா தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்து கொண்டு, பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அதேபோல் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.






