என் மலர்
நீங்கள் தேடியது "உருது தொடக்கப்பள்ளி"
- மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது.
- ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்
இஸ்லாமியர்களின் உருது மொழிக்கு எதிராக செயல்படும் பாஜக தேர்தலுக்காக உருது மொழியில் பிரசாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மும்பை மாநகராட்சி சமீபத்தில் பைகுல்லாவில் உள்ள ஒரு உருது கற்பித்தல் மையத்தை இடித்தது. பாஜகவின் எதிர்ப்புகளுக்குப் மத்தியில் மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்து.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி, தனது தொகுதியில் உருது மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினரை ஈர்க்கும் வகையில் பாஜக பெண் வேட்பாளர் ஒருவர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை உருது மொழியில் அச்சிட்டு வாக்குகளை கோரியுள்ளார். அவரது படமும் உள்ளூர் தலைவர்களின் படங்களும் நோட்டீஸ்களில் அச்சிடப்பட்டுள்ளன.
பாஜக சந்தர்ப்பவாத அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) ஆகிய கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எம்என்எஸ் கட்சி, "அப்படியானால் இதுதான் பாஜகவின் தீவிர இந்துத்துவா அரசியலா? ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளது.
ஏஐஎம்ஐஎம் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "நேற்று வரை, பாஜக உருது மொழியை வெறுத்தது. அது ஒரு முழு சமூகத்தையும் அவமதிப்பதற்காக இருந்தது. உருது பேசுபவர்களைப் பற்றி மோசமான செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்று அவர்களே முஸ்லிம் வாக்குகளுக்காக உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குகளைப் பெற அவர்கள் எதையும் செய்வார்கள்" என்று சாட்டியுள்ளது.
- கார்த்திகேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 32-வது வார்டு கொணவட்டத்தில், மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து கிடந்தது. இதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய வகுப்பறைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
பணிகள் நடந்து முடிந்த நிலையில் மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது.
32-வது வார்டு கவுன்சிலர் சாஜிகா தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் கலந்து கொண்டு, பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அதேபோல் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.






