என் மலர்
நீங்கள் தேடியது "Vallalar Green Park"
- நடை பயிற்சி செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்
- அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே பல லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பூங்காவிற்கு அழைத்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் காலை, மாலை நடை பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் நடை பயிற்சி செல்லும் பகுதியில் பெரிய மரம் ஒன்று பட்டு போய் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் நடை பயிற்சி செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
பொதுமக்கள் மீது மரம் முறிந்து விழுந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






