என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.பி.எல். போட்டிகள் போல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்
    X

    குடியாத்தத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நடந்த காட்சி.

    ஐ.பி.எல். போட்டிகள் போல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்

    • 12 அணிகள் ஆன்லைன் மூலம் பதிவு
    • வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் பரிசாக அறிவிப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட அளவில் குடியாத்தத்தில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் போல் குடியாத்தத்திலும் நடத்த வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இதனைத் தொடர்ந்து குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் என்ற 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் இன் நிறுவனர் பி.கமல்ராஜ், குடியாத்தம் டிஜிட்டல் டெலிவரி சேர்ந்த சதீஷ்குமார், முத்துக்குமார் ஆகியோர் இணைந்து இந்த குடியாத்தம் கிரிக்கெட் பிரிமியர் லீக்கில் வீரர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கினர்.

    குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 12 அணிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது இந்த குடியாத்தம் பிரீமியர் லீக்கில் விளையாட 370 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

    அந்த வீரர்கள் விளையாடிய போட்டிகள் எடுத்த ரன்கள் எடுத்த விக்கெட்டுகள் சராசரி அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12 அணிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு அணிக்கு பதினைந்தாயிரம் புள்ளிகள் வழங்கப்படும் அதன் மூலம் அவர்கள் 11 விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியும் தேர்ந்தெடுக்கலாம் கேப்டன், துணைகேப்டன் மற்றும் இருவர் என ஒரு அணிக்கு 15 பேர் என 180 பேர் தேர்வு செய்யும் பணிகள் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    வீரர்கள் ஏலம்

    ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் ஏலத்தொகை எந்த வகையில் நடைபெறுமோ அதே போல் வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் கேப்டன் மற்றும் மேலாளர் அமர்ந்து கொண்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தனர் அதிகப்பட்சமாக விஜயகாந்த் என்ற வீரர் 5 ஆயிரத்து நூறு புள்ளிகளும் சிலம்பரசன் என்பவர் 4600 புள்ளிகளும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    ஏலத்தில் எடுக்கப்பட்ட அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அணிகள் இருக்கும் இந்த ஆறு அணிகளில் மோதும் இதில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் விதிமுறைகளில் நடத்தப்படும் அதேபோல் எலிமினேட்டர் வழியில் இறுதிப்போட்டி நடைபெறும் என தெரிவித்தனர்.

    இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் பரிசாகவும் 30 ஆயிரம் இரண்டாம் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணி வீரர்களுக்கு டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் வழங்கப்படும் போல் வண்ண வண்ண சீருடைகள் வழங்கப்படும்.

    அதே விதிமுறைகளை பயன்படுத்தி குடியாத்தத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானங்களில் ஆகஸ்ட் 15 முதல் இந்த போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை இந்த போட்டிகள் நடைபெறும் இது முதல் ஆண்டு என்பதால் ஏலத்தொகை வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

    வரும் ஆண்டுகளில் வீரர்களுக்கான ஏலத்தொகை குறித்து விவரங்கள் வெளியிடப்படும் மேலும் குடியாத்தத்தில் உள்ள சிறந்த வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் பெயர்களில் அணிகள் பதிவு செய்யப்பட்டு வரும் ஆண்டுகளில் மிகச் சிறந்த போட்டிகளாக குடியாத்தம் பிரிமியர் லீக் செயல்படும் என இந்த போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் கமல்ராஜ், சதீஷ்குமார்முத்துக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    குடியாத்தத்தில் ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போல் வீரர்களை தேர்வு செய்த நிகழ்ச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×