என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Road to hill villages"

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றியம் சார்பில் கலைஞரின் 100-வது பிறந்தநாள் நூற்றாண்டு விழா சாதனையை முன்னிட்டு ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி, தேவிசெட்டிகுப்பம் ஆகிய ஊராட்சிகள் இணைந்து கரடிகுடியில் உள்ள சந்தைமேடு பகுதியில் மாபெரும் தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேவிசெட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்ஜோதி மணிமாறன், கரடிகுடி ஊராட்சி மன்ற தலைவர் சி.கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய அவைத்தலைவர் மணிமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன், எம்எல்ஏ நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசுகையில்:-

    தமிழ்நாடு முதல்வரின் இந்த ஆட்சியில் அணைக்கட்டு தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தார் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நான் பல முறை பேசி அணைக்கட்டு பகுதிக்கு உட்பட்ட மலை கிராமத்திற்கு தார் சாலை வசதி ஏற்படுத்தியுள்ளேன்.

    மக்களுக்காக இரவும், பகலும் அயராது பாடுபடும் ஒரே தலைவர் நமது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். இந்த ஆட்சியில் மட்டும் தான் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தையே மாற்றியுள்ளது. மாணவிகளுக்கு ஊக்க தொகை, குடும்ப தலைவிக்கு உரிமை தொகை, இலவச பஸ் கண்டனம் என சொல்லி கொண்டே போகலாம் என்றார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரபாண்டியன், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன் உட்பட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரசு நன்றி கூறினார்.

    ×