என் மலர்
வேலூர்
- கலெக்டர் எச்சரிக்கை
- தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
வேலூர்:
வேலூர் காட்பாடி சாலையில் சித்தூர் பஸ் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை புதியதாக ஓட்டல் திறக்கப்பட்டது.
திறப்பு விழா நாளான அன்று ஒரு நாள் மட்டும் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடி இருந்தனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் காட்பாடி - வேலூரை இணைக்கும் முக்கிய சாலையான அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் காலை நேரத்தில் அதிக வெயிலின் காரணமாக பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் அல்லது அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூடவும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரும்பொழுது அதற்கான தகுந்த ஏற்பாடுகளை செய்து பின்னர் ஓட்டலை திறக்கும் படியும் அறிவுரை வழங்கப்பட்டது.
பின்னர் அந்த ஓட்டலின் உரிமம் மற்றும் இதர விதிமுறைகள் சரியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஓட்டல் சார்பில் தங்கள் தவறை உணர்ந்து சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக கடிதம் கொடுத்ததன் அடிப்படையில் அன்றைய தினம் மாலையே ஓட்டல் திறக்கப்பட்டது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒரு சிலர் இந்த ஓட்டல் பிரச்சனையை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், காளாம்பட்டு அடுத்த வங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு அதே பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கு பிரச்சினை தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இவருக்கு சொந்தமான இடத்தை எதிர் தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கோவிந்தராஜ் கலெக்டர், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்தெந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவிந்தராஜ் தனது மனைவி நதியாவுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார்.
அலுவலக வாசலில் கணவன்- மனைவி 2 பேரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ குளிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி விசாரணை நடத்தினார். அதிகாரிகள் கணவன்- மனைவி 2 பேரையும் இது நிலம் சம்பந்தமான புகார் என்பதால், அவர்களை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். காலைச் சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் விடாமல் சத்துணவுத் திட்டத்திலே இணைத்திட வேண்டும்.
சத்துணவுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 108 மூலிகைப் பொருட்கள் கொண்டு யாகம்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. யாகசாலை பூஜையில் 108 மூலிகைப் பொருட்கள் மற்றும் திரவியங்கள் கொண்டு யாகம் நடத்தப்பட்டது.
மேலும் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் அணைக்கட்டு மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடேசன், ஏரிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர் கீதாவெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு
வேலூர்:
உலகதொகை தினத்தை முன்னிட்டு கலெக்டர் மக்கள் குமாரவேல் பாண்டியன் இன்று மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியை வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கு முன்னதாக மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் பெகுமாரவேல் பாண்டியன் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார். வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தி துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மருமணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).
கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- அனுபவமிக்க ஓட்டுநர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் இயக்கப்படுகிறது
- இந்த திட்டம் நோயாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இங்கு நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் முதியவர்கள், மற்றும் நடக்க முடியாத நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்தும், படுக்க வைத்தும் அழைத்துச் செல்கின்றனர்.
ஊழியர்கள் இல்லாத நேரத்தில் புற நோயாளிகள் பிரிவில் நடக்க முடியாத நோயாளிகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலையை தடுக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நோயாளிகள் அமர்ந்து செல்வதோடு, உட்கார முடியாத நோயாளிகளை படுக்கவைத்து அழைத்துச் செல்ல படுக்கையும் உள்ளது.
அனுபவமிக்க ஓட்டுநர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் இந்த பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது. சத்தம் இல்லாமல் செல்லும் இந்த பேட்டரி வாகனம் மூலம் நோயாளிகள், புறநானையாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விடப்படுகிறது.
ஆம்புலன்ஸ் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் மேற்பகுதியில், ஆம்புலன்சில் உள்ளது போல் சைரனும் உள்ளது.
உயிருக்கு போராடும் அல்லது ஆபத்தான நிலையில் உள்ள நோய்களை அழைத்துச் செல்லும் பொழுது இந்த சைரன் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது.
பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் நோயாளிகள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
- தாம்பரத்தில் மடக்கி பிடித்தனர்
- படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அருகே பச்சிளம் குழந்தையை, தனக்கு பிறக்கவில்லை என கூறி கழுத்தை அறுத்த தந்தையை தேடி போலீசார் சேலம் விரைந்து சென்றனர்.
தலை பிரசவம்
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).
கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அணைக்கட்டு போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- தலை, முகம் சிதைத்தபடி பிணமாக கிடந்தார்
- தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை
வேலூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா அருகே உள்ள பாஸ்மார் பெண்டா மலைப்பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி வள்ளியம்மாள் (வயது 60).
இவர் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி கடந்த 30-ந் தேதி ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அன்று மாலை வள்ளியம்மாள் அங்குள்ள விவசாய நிலத்தில் தலை, முகம் சிதைத்தபடி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை வழக்குதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் அமைந்துள்ளது
- செல்பி பாயிண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் ராட்சத ராஜாளி பறவை தனது இறக்கைகளை அடித்தபடி குடும்பத்துடன் திரண்டு வரும் மக்களை வரவேற்கும் வகையில் பொருட்காட்சி நடந்து வருகிறது.
கர்ஜிக்கும் சிங்கம், பிளிரும் யானைகள் மற்றும் உருமும் பயங்கர காட்டு மிருகங்கள், கிளிகள், மரங் கொத்தி பறவைகள், ஈமு பறவைகள், பெங்குவின்கள், வண்ண வண்ண பறவைகளை தத்ரூபமாக கண்முன் நிறுத்தும் வகையில் அவைகளின் இயற்கையாக எழுப்பும் சத்தத்துடன் ரோபோட்டிக் வடிவில் அமைந்துள்ளன.
பிரமாண்ட அரங்கத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மிருகங்கள், ராட்சத மிக்கி மவுஸ் உருவம், பறவைகளின் உருவங்கள். உலக தலைவர்களின் தத்ரூப ஓவியங்களு டன் கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் 30 வகையான செல்பி பாயிண்டுகள் அமைந்துள்ளன.
இவற்றை தாண்டி பொருட் காட்சி அரங்கில் வரும்போது, வீட்டு உபயோக பொருட்கள், மகளிர் அலங்கார பொருட்கள் என 25 வகை யான பொருட்களை விற்கும் கடைகள் அமைந்துள்ளன.
இவற்றில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வரும் போது திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுகள், 30 ஆயிரம் பந்துகள் மத்தியில் பால்ரவுண்ட் விளையாட்டு, ஸ்னூக்கர், குட்டி கார், குட்டி பைக், குட்டி ஜீப் என குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற அம்சங்கள் இடம்பெற்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.
உணவு விற்பனை கடைகள்
இதை தாண்டி வரும் போது பெரிய வெள்ளை அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பாணிபூரி வகைகள், மதுரை ஜிகர்தண்டா என மக்கள் ருசிக்கும் வகையிலான உணவு விற்பனை கடைகள் அமைந்துள்ளன.
மக்களின் எண்டர்டெய்னுக்காக ஜாயின்ட் வீல், ராட்டினம், சுனாமி, பெண்டுலம், பிரேக் டான்ஸ், ஏர்பலூன், குட்டி ரயில், குட்டிக்கார், படகு என பொழுது போக்கு விளையாட்டுக்கள் என அனைவரையும் கவரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. '
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இடம்பெற்றுள்ள இப்பொருட்காட்சியை விஜய் டிரேடர்ஸ் உரிமையாளர் மு.சந்திரசேகரன் அமைத்துள்ளார்.
பொருட்காட்சி 48 நாட்கள் நடைபெறும் என்றும், வேலூர் மக்கள் திரண்டு வந்து பொருட்காட்சியை பார்த்து ரசித்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
- வேலூர் கோர்ட்டில் சரண்
- நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்
வேலூர்:
செங்கல்பட்டை சேர்ந்த லோகேஷ் என்ற ரவுடி கடந்த 6-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது மர்ம நபர்கள் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
லோகேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த விவேக்ராஜ் (வயது 20) என்பவர் இன்று வேலூர் கோர்ட்டிற்கு வந்து ஜேஎம் 4 நீதிபதி ரோஸ் கலா முன்பு சரணடைந்தார்.
- அமைச்சர் துரைமுருகன் மரியாதை
- ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
வேலூர்:
இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்க பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு 217-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு இன்று காலை அமைச்சர் துரைமுருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உதவி கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.






