என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian soldiers died heroically"

    • அமைச்சர் துரைமுருகன் மரியாதை
    • ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

    வேலூர்:

    இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்த புரட்சியில் ஏராளமான இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    அவர்களின் நினைவாக வேலூர் கோட்டை அருகே உள்ள மக்கான் சந்திப்பில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அமைக்க பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 10-ந் தேதி வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டு 217-வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காலை வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம், நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு இன்று காலை அமைச்சர் துரைமுருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மேயர் சுஜாதா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உதவி கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    ×