என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் தொகை தின பேரணி
    X

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேரணியை தொடங்கி வைத்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார்.

    உலக மக்கள் தொகை தின பேரணி

    • கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு

    வேலூர்:

    உலகதொகை தினத்தை முன்னிட்டு கலெக்டர் மக்கள் குமாரவேல் பாண்டியன் இன்று மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியை வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதற்கு முன்னதாக மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் பெகுமாரவேல் பாண்டியன் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார். வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தி துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மருமணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×