என் மலர்tooltip icon

    வேலூர்

    • 10 நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர்
    • விமான படை பயிற்சி

    ஜோலார்பேட்டை:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் உள்ள கோடை விழா மைதானத்தில் நேற்று அரக்கோணம் விமானப்படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் அரக்கோணம் விமான படை பயிற்சி மாணவர்கள் 35 பேர் மற்றும் விமான படையினர் 15 பேர் என மொத்தம் 50 பேர் ஏலகிரி மலையில் கடந்த 10 நாட்களாக தங்கி பயிற்சி பெற்றனர்.

    இந்த முகாமில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 மரக்கன்றுகளை பயிற்சி மாணவர்கள் நட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி சனவாஸ்ாபாபு, ்ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கட்டுமாண பணிகளையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைகிறது

    வேலூர்:

    வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை, முதல்- அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் தொழில்நுட்ப மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    இதனை தொடர்ந்து வேலூர் அப்துல்லாபுரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டுமாண பணிகளையும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வை யிட்டனர்.

    அப்போது வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் ரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர்கள்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோவில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு 3 வாலிபர்கள் பைக்கை நிறுத்தினர்.

    பின்னர் அதன் மீது கேக்கை வைத்து அதை பட்டாகத்தியை கொண்டு வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

    மேலும் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபருக்கு ஆளுயர பூ மாலை அணிவித்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிகவும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நள்ளிரவில் கையில் பட்டாசு, பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பொதுமக்கள் பீதி
    • போலீசார் ஆய்வு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் அலமேலு மங்காபுரம் அருகே உள்ள பேங்க் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மகன் ஸ்ரீவாசன் இவர்கள் ஒரே வீட்டில் தனித்தனி தனி தனியாக வசித்து வருகின்றனர். வெங்கடாசலம் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார்.

    நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் வெங்கடாஜலம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர். மேலும் அவரது மகன் குடியிருந்த பகுதியிலும் புகுந்தனர். வீட்டில் பல்வேறு இடங்களில் நகை பணம் இருக்கிறதா என தேடிப்பார்த்தனர். எதுவும் இல்லாதால் அங்கிருந்து மற்ற வீடுகளுக்கு திருட சென்றனர்.

    இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள விஜயவர்மன் என்பது வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த பட்டுப் புடவைகளை திருடினர். மேலும் குப்பன் என்பவரது வீட்டில் இருந்து ஒரு பைக் திருடி சென்றனர்.

    அதேபோல அந்த பகுதியில் உள்ள டாக்டர் மிதுன் சுகுமார் வீட்டுக்குள் புகுந்து நகை பணம் உள்ளதா என தேடி பார்த்தனர். எதுவும் இல்லாதால் அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    ஒரே இரவில் அடுத்த அடுத்த 5 வீடுகளில் கொள்ளை கும்பல் போது அட்டகாசம் செய்துள்ளனர்.

    இன்று காலையில் வீடுகளின் உரிமையாளர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது குறித்து சத்துவா ச்சாரி போலுசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஒரே இரவில் 5 வீடுகளில் நடந்து திருட்டு சம்பவம் சத்துவாச்சாரி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    • மிரட்டல் விடுத்தவர்கள் கைது
    • தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கழனிப்பாக்கம் ஊராட்சி, கந்தனேரி கூட்ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் உள்ளது.

    கந்தனேரி கூட்ரோட்டில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள இந்த புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி உள்ளனர்.

    இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சா லைத்துறையினர் ஏற்கனவே, வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் ஆக்கிர மிப்புகளை அவர்கள் அகற்றி தரவில்லை.

    இதனையடுத்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் பிரகாஷ், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பள்ளி கொண்டா இன்ஸ்பெக்டர் கருணா கரன், கிராம நிர்வாக அலுவலர் சாட்லுதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கந்தனேரி கூட்ரோட்டுக்கு பொக்க லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணெ ன்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தீக்குளிப்போம்் என மிரட்டல் விடுத்தனர்.

    அவர்களை போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும் போராட்ட க்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றன தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி சாதனை
    • இடது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் மகள் ஷாலினி (வயது7). இவர் கடந்த 2016-ம் ஆண்டு இடது காலில் அடிபட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    அப்போது இவரது இடது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது.

    இதனை அடுத்து சிறுமி ஷாலினிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் செயற்கை கால் பொருத்தப்பட்டது.

    தற்போது அவர் வளர்ந்து விட்ட காரணத்தால் செயற்கை கால் அளவு குறைந்தது. இதனால் அவர் நடக்க முடியாத சூழல் நிலவியது.

    இதனை அடுத்து சிறுமி ஷாலினிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 2-வது முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது.

    இதேபோல் திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் கார்த்திக் (23) சாலை விபத்தின் போது அவரது வலது கால் முட்டியின் கீழ் பகுதி அகற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு செயற்கை கால் பொருத்தப்பட்டது.

    முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், 2 பேருக்கும் செயற்கை கால் பொருத்திய பிறகு மருத்துவமனையில் நடை பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 2 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஷாலினி மற்றும் கார்த்திக் ஆகியோர், கல்லூரி டீன் பாப்பாத்தி முன்பு நடந்து காட்டினார்.

    அப்போது உடன் மருத்துவமணை கண்காணி ப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், துறை தலைவர்கள் ஸ்ரீகாந்த், ஜெயசீலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ரூ.40 ஆயிரத்துடன் வெளியேறினார்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் சேர்ந்தவர் கவிதா (வயது 40). இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ளார். இவர் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை கவிதாவின் கணவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு கவிதா ஆளானார் .

    பின்னர் வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம், 13 வயதுடைய மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

    வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் மற்றும் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தில், உறவினர் வீடுகளிலும் தேடி உள்ளார். அவர்கள் கிடைக்காததால் இதுகுறித்து அவர் காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கவிதாவையும், 13 வயதுடைய மகளையும் தேடி வருகின்றனர்.

    • மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடி ராம் சேட் நகரை சேர்ந்தவர் நியாஸ் (வயது 26) பிரியாணி மாஸ்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 11-ந் தேதி நியாஸ் மது அருந்தி விட்டு வந்து மனைவிடம் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் வீட்டின் அறையில் தூங்க சென்றார். மறுநாள் அதிகாலையில் அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார். அப்போது நியாஸ் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் செம்பேடு பூமணி நகரை சேர்த்தவர் இளையராஜா. இவரது மனைவி பேபி ஷாலினி (வயது 29). இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 11-ந் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தொங்கி நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேபி ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
    • 10 நாட்கள் தொடந்து நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 25-ம் ஆண்டு ஆடிப்பூரத்தையொட்டி பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தொடந்து ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை கோவில் நடை திறப்பு, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் மற்றும் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    தினமும் 10 நாட்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான வருகிற 22-ந் தேதி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தீர்த்தவாரி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது

    வேலூர்:

    வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலுார்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகிதப்பட்டறை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.

    இதனால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதியில் சாலையை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை முருகன் கோவில் தொடங்கி- சத்துவாச்சாரி நெடுஞ்சாலையில் ஆற்காடு சாலை இணையும் பகுதி வரை முழுமையாக புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

    காகிதப்பட்டறையில் இருந்து தொடங்கிய இந்த - பணியில், முதல்கட்டமாக பாதாள சாக்கடை திட்ட பைப்லைன் அமைத்த பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது;-

    இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி முடிக்கப்படும். பின்னர் ஆற்காடு சாலையில் முழுமையாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
    • ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த 55 புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ அசரீர் மலை முருகன் கோவில் உள்ளது. ஆடி கிருத்திகை, தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் கிருத்திகை, சஷ்டி தினத்தன்று இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    பொதுமக்கள் நிர்வாகித்து வரும் இந்த முருகன் கோவிலை, இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இந்து முன்னணியினருடன் சேர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

    இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் பொதுமக்கள் சத்துவாச்சாரி மேம்பாலத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்று, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது அங்கு அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்.

    அப்போது போராட்டக்காரர்கள் கோவில் நிர்வாகத்தை இந்து முன்னணி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அந்த பகுதியை சேர்ந்த சிலர் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் முருகன் கோவிலை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

    நல்ல வருவாய் ஈட்டும் இந்த கோவிலை, பொதுமக்களே நிர்வகிக்க அனுமதி வழங்க வேண்டும். அறநிலை துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியை கைவிட வேண்டும்.

    இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.

    ×