ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

மிரட்டல் விடுத்தவர்கள் கைது தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தனர்
ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட கழனிப்பாக்கம் ஊராட்சி, கந்தனேரி கூட்ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் உள்ளது.

கந்தனேரி கூட்ரோட்டில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள இந்த புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டி உள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சா லைத்துறையினர் ஏற்கனவே, வீடுகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் ஆக்கிர மிப்புகளை அவர்கள் அகற்றி தரவில்லை.

இதனையடுத்து இன்று காலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட ப்பொறியாளர் பிரகாஷ், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பள்ளி கொண்டா இன்ஸ்பெக்டர் கருணா கரன், கிராம நிர்வாக அலுவலர் சாட்லுதுரை உள்ளிட்ட அதிகாரிகள் கந்தனேரி கூட்ரோட்டுக்கு பொக்க லைன் எந்திரத்துடன் வந்தனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் கடைகளை பொக்லைன் மூலம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணெ ன்ணெய் மற்றும் பெட்ரோல் கேனுடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தீக்குளிப்போம்் என மிரட்டல் விடுத்தனர்.

அவர்களை போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும் போராட்ட க்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றன தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com