என் மலர்
நீங்கள் தேடியது "அரசு ஐ.டி.ஐ. வளாகம்"
- கட்டுமாண பணிகளையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைகிறது
வேலூர்:
வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை, முதல்- அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் தொழில்நுட்ப மையத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து வேலூர் அப்துல்லாபுரத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில் நுட்ப பூங்கா கட்டுமாண பணிகளையும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வை யிட்டனர்.
அப்போது வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சங்கரலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் ரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






