என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர்-ஆற்காடு ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்
- வாகன ஓட்டிகள் அவதி
- பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது
வேலூர்:
வேலுார் மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலுார்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகிதப்பட்டறை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த பகுதியில் சாலையை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை முருகன் கோவில் தொடங்கி- சத்துவாச்சாரி நெடுஞ்சாலையில் ஆற்காடு சாலை இணையும் பகுதி வரை முழுமையாக புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
காகிதப்பட்டறையில் இருந்து தொடங்கிய இந்த - பணியில், முதல்கட்டமாக பாதாள சாக்கடை திட்ட பைப்லைன் அமைத்த பகுதிகளில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரி கள் கூறியதாவது;-
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணி முடிக்கப்படும். பின்னர் ஆற்காடு சாலையில் முழுமையாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றனர்.






