என் மலர்
வேலூர்
வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச் செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சபடி, விடுப்பு சம்பளம், உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெரும் அன்றைய நாளிலேயே பண பலன்களை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தக்கோலம்:
அரக்கோணம் அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அம்மு (வயது 30). 9 மாத கர்ப்பிணி கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி இரவு கடையில் டிபன் வாங்கி வருவதாக ராஜேஷ் வெளியே சென்றுள்ளார்.
அப்போது அம்மு ஸ்டவ் பற்ற வைத்தார். எதிர்பாராத விதமாக அம்முவின் சேலையில் தீ பிடித்தது. இதனால் அம்மு அலறி துடித்தார். அம்முவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அம்முவை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அம்மு, அதன் பின்னர் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்து ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி அம்முக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அம்முவுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்தது.
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து கோமதியும் இறந்துவிட்டார். டி.எஸ்.பி. துரைபாண்டியன், இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜேஷ், அம்முவுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்காயம் அடைந்த இளம்பெண்ணும் குழந்தையும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கீழ்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (வயது 28). தனியார் நிதிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (23) அதேபகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலைபார்த்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கட்யுவராஜ், அதன்பின்னர் திரும்பி வரவில்லை.
இதுகுறித்து கோமதி, பாகாயம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் பணிபுரிந்த நிதி நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 15 மாதங்களுக்கு பின்னர் வேலப்பாடியை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெங்கட்யுவராஜை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரைபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் மோர்தானா அணை பகுதிக்கு சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் கிடந்த வெங்கட்யுவராஜின் எலும்புகூடுகளை கைப்பற்றினர்.
விசாரணையில் கள்ளக்காதல் காரணமாக வெங்கட்யுவராஜை கொலைசெய்தது தெரியவந்தது.
ராஜ்குமார், ஆரணியை சேர்ந்த அவரது நண்பர்களான செந்தில் (33), வேலு (32), கோட்டீஸ்வரன் (38), விஜய் (23), கோமதி ஆகியோர் கைது செய்யபட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கோமதி வேலூரில் உள்ள மெடிக்கல், பியூட்டிபார்லர் ஆகியவற்றில் வேலை பார்த்தவர். அப்போது ராஜ்குமாருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டது.
கணவன் இல்லாத நேரத்தில் கோமதி வீட்டுக்கு சென்று ராஜ்குமார் சந்தித்தார். இது வெளியே தெரிந்தது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வெங்கட்யுவராஜ் கோமதியை வேலைக்கு அனுப்பவில்லை. மேலும் போன்பேசுவதை நிறுத்த செய்தார்.
கள்ளக்காதலனை சந்திக்க முடியாததால் கோமதி ஆத்திரமடைந்தார். ராஜ்குமாரை தொடர்பு கொண்டு கணவனை கொலை செய்ய கூறியுள்ளார்.
அவரது நண்பர் செந்தில், ராஜ்குமார் இருவரும் வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அவருக்கு இருக்கும் மது பழக்கத்தை பயன்படுத்தி கொண்டனர்.
கொலை செய்வதற்கு 2 மாதத்துக்கு முன்பாக வேலூரில் உள்ள மதுபாரில் வெங்கட்யுவராஜ் மது குடித்தார். அவரை தேடி சென்று செந்தில் பேச்சு கொடுத்தார். தான் ராணுவத்தில் வேலை செய்கிறேன்.
அடிக்கடி மது கிடைக்கும் எனக்கூறி மது வாங்கி கொடுத்தார். அவரை அடிக்கடி அழைத்து மது வாங்கி கொடுக்க ஆரம்பித்தார்.
செந்திலின் நட்பை உண்மையென நம்பிய வெங்கட்யுவராஜ் அவருடன் நீண்ட நேரம் பொழுதை கழித்தார். மாலை நேரம் வந்ததும் கணவனிடம் செல்லமாக பேசி கோமதி மது குடிக்க அனுப்பி வைத்துள்ளார்.
அவர் சென்றதும் ராஜ்குமாரை வீட்டுக்கு வரவழைத்து வீட்டில் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 2 மாதங்கள் இது நீடித்தது.
வெங்கட்யுவராஜிக்கு மது வாங்கி கொடுக்க பணம் அதிக செலவானது. இதனால் திட்டமிட்ட படி அவரை கொலை செய்ய செந்தில் அவரது கூட்டாளிகளுடன் ஒகேனக்கல் அழைத்து சென்றனர். அங்குள்ள காட்டுபகுதியில் மது குடித்தனர்.
அப்போது வெங்கட் யுவராஜின் போனில் அவரது நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் ஒகேனக்கல்லில் செந்திலுடன் இருப்பதை கூறிவிட்டார். இதனால் அங்கு வைத்து கொலை செய்யும் முடிவை கைவிட்டனர்.
பின்னர் மோர்தானா அணை அருகே காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிக மது ஊற்றி கொடுத்து வெங்கட்யுவராஜை டவலால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு உடலை போட்டு சென்றுள்ளனர்.
போலீசார் உடலை தேடி சென்றபோது எலும்பு கூடாகவே கிடந்தது. மேலும் வெங்கட்யுவராஜ் பேண்ட் கைபற்றினர் அவர்கள் குடித்த போது விட்டு சென்ற மதுவுடன் இருந்த பாட்டிலும் அப்படியே கிடந்தது அதையும் போலீசார் மீட்டனர்.
கணவனை கொலை செய்துவிட்டு அவர் மாயமானதாக கோமதி நாடக மாடியுள்ளார்.
கள்ளதொடர்பையும் தொடர்ந்தார் 15 மாதங்களுக்கு பிறகு கொலையில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் ரங்காபுரம் பஸ் நிலையம் அருகில் வாடகைக்கு பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார்.
இந்த குடோனில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருந்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு திடீரென குடோனில் தீ பிடித்து எரிந்தது. இதை கவனித்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. அப்போது குடோனில் இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது.
இதனால் ரங்காபுரம் பகுதியில் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால் அங்கிருந்த மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் ஒரு மணி நேரம் பற்றி எரிந்தது.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தை காண ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் சர்வீஸ் ரோட்டில் சென்ற அனைத்து வாகனங்களும் மாற்றுபாதையில் திருப்பி விடப்பட்டன.
அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாக சதி வேலை செய்தார்களா? என்ற கோணத்தில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்கோலம்:
அரக்கோணம் அடுத்த மேல் பாக்கத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். அதே கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (எ) ராஜ் (22).
இவர் கடந்த மாதம் மைனர் பெண்ணை கடத்தி சென்று காஞ்சிபுரத்தில் வைத்து ரகசியமாக தாலி கட்டி பாலியல் பலத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மைனர் பெண்ணின் தாய் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரக்கோணம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ராணிப்பேட்டை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். தலைமறைவாக இருந்த பால்ராஜை தேடி வந்தனர். நேற்று மாலை அரக்கோணம் போலீசார் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பால்ராஜை கைது செய்தனர். பின்னர் மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பால்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து அரக்கோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக்கோணம் கிளை சிறையில் அடைத்தனர்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு தினமும் பெண்களுக்கான சிறப்பு ரெயில் இயக்கபடுகிறது.
இதில் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்வோர் என 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த சிறப்பு ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த பெண்கள் சிறப்பு ரெயில் கடந்த சில மாதங்களாக தினமும் 20 நிமிடம் காலதாமதமாக வருவதாகவும் இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6.45-க்கு வர வேண்டிய இந்த சிறப்பு ரெயில் 7.25 மணிக்கு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் செய்தனர்.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வரும் நாட்களில் குறித்த நேரத்தில் ரெயிலை இயக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ArakkonamRailwayStation
குடியாத்தம்:
குடியாத்தம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குடியாத்தம் மேல்பட்டி செல்லும் சாலை உள்ளிகூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 55) பால் வியாபாரி. இவர் நேற்று மாலை பங்களாமேடு என்ற இடத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர் படுகாயமடைந்தார் அவரை மீட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மணிவண்ணன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி, பிப்.17-
வாணியம்பாடியில் 1½ வயது குழந்தை கொன்ற தாய்-கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் நளினி. இவருக்கும் பெங்களூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள். 3-வது குழந்தை ரித்திகா (வயது 1½) பெங்களூரில் குடும்பம் நடத்தி வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முரளி என்பவருடன் நளினிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாணியம்பாடிக்கு வந்தார். நேற்று முன்தினம் நளினி வீட்டுக்கு முரளி வந்திருந்தார். அப்போது நளினி கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்த போது குழந்தை ரித்திகா உடலில் காயத்துடன் உயிருக்கு போராடியது.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் குழந்தை இறந்து விட்டது. வாணியம்பாடி டவுன் போலீசார் குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து நளினி அவரது கள்ளக்காதலன் முரளி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நளினி, முரளியை கைது செய்தனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓச்சேரியை அடுத்த களத்தூர் கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 29), தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (21). பொன்னையா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி சர்மிளா தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தனது கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதையடுத்து நேற்று களத்தூர் பாலாற்றில் புதைக்கப்பட்ட பொன்னையாவின் உடலை தோண்டி எடுக்க அவளூர் போலீசார் ஏற்பாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பொன்னையாவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அங்கு வந்திருந்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை நிபுணர்கள் டாக்டர் நரேந்திரகுமார் மற்றும் டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் பொன்னையாவின் உடல் கூறுகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே பொன்னையாவின் சாவில் உள்ள உண்மை தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதேபோல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளையும், நாளை மறுதினம் 19-ந் தேதியும் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மறுமார்க்கமாக வேலூருக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் கன்டோன்மென்ட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
இந்த ரெயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சாபுரம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாளை மறுநாள் 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரெயில் காலை 5.55 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை முக்கனூரை சேர்ந்தவர் சுரேஷ். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 20). தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது திருமணமான 4 மாதத்துக்கு பிறகு வெளிநாடு சென்ற சுரேஷ் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கார்த்திகா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திகாவின் தந்தை வடிவேலு ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
போலீசார் கார்த்திகா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.






