என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vellore protest
நீங்கள் தேடியது "Vellore protest"
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கர் மேஸ்திரி, சுப்பிரமணியன், திருப்பதி, சுந்தரம் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் சட்ட தொகுப்புகள் கைவிடவேண்டும். பீடி தொழில் முறைசாரா கட்டுமானம் ஆட்டோ, சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச பென்ஷன் ரூ 6 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்க உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு காப்பீடு வசதிகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே உள்ள பாண்டியநல்லூரில் காமதேனு நகர், ராஜேஷ் நகர் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஆழ்துளை கிணறுகளில் இருந்து மேல்நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சோளிங்கர்- பானவரம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாரா வளர்ச்சி அலுவலர் அன்பரசு, கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில்- எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடந்த முறை மறியலில் ஈடுபட்டபோது தற்காலிகமாக குடிநீர் வினியோகம் வழங்கபட்டது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே முறையான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். ஒன்றிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் ரங்காபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு அரசு போக்குவரத்து சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். சம்மேளன பொருளாளர் தயானந்தன், தலைவர் காசி, பொதுச் செயலாளர் பரசுராமன், துணை பொதுச் செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். நிலுவையில் உள்ள பஞ்சபடி, விடுப்பு சம்பளம், உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெரும் அன்றைய நாளிலேயே பண பலன்களை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

×

X