என் மலர்
வேலூர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38). கடந்த மாதம் 7-ந்தேதி ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்ந நிலையில் கடந்த 19-ந்தேதி லோகநாதனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி டொக்கு தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாயில் இவருடைய மகள் ஜாக்கியா (வயது 29).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 நாட்களுக்கு பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்து போன பெண் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்த கல்லூரி மாணவர் முகமது நிப்ராஸ் சையான் (20) என்பவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள சேத பாதிப்புகளை மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
மத்திய நிதியமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல் தலைமையில் மத்திய நீர்வள ஆதார முகமையின் இயக்குநர் தங்கமணி மற்றும் பவ்யா பாண்டே ஆகியோருடன் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு மின் ஆளுமை நிர்வாக இணை இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் மழை வெள்ள சேத பாதிப்புகள் குறித்து கூறப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். 9 கால்நடைகள், 14 ஆயிரத்து 800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன. மழைக்கால நிவாரண முகாம்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். 627 வீடுகள் பகுதியாகவும், 72 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் மொத்தம் 2.32 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் 101 ஏரிகளில் 83 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
அதேபோல், மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் 101.08 கி.மீ சாலைகள் சேதமடைந்துள்ளன. 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள் சேமதடைந்துள்ளன. 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளை கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் நெற்பயிர்களுடன் தோட்டக்கலை பயிர்கள் என மொத்தம் 606.95 ஹெக்டேர் அளவுக்கு சேதமடைந்துள்ளன.பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
தொடர்ந்து நடந்து வருவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் மொத்த சேத மதிப்பு தோராயமாக ரூ.199 கோடியை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகளால் வேளாண்மை துறையின் 2781 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2050 ஹெக்டேர் வேளாண்மை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 382 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது.
வேளாண்துறை சேதங்களுக்கு ரூ.3.29 கோடி. தோட்டக்கலை துறைக்கு ரூ.52 லட்சம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.11.8 கோடி, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5.4 கோடி. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.5.38 கோடி, ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.18 கோடி.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ரூ.1 கோடி. பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் மருத்துவ கட்டிடங்கள் ரூ.1 கோடியே 27 லட்சம், வருவாய்த்துறைக்கு ரூ.78 லட்சமும் என மொத்தமாக ரூ.29 கோடியே 44 லட்சம் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய குழுவிற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கலெக்டர் அலுவலகம் எதிரில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கும் தி.மு.க அரசை கண்டித்து இளைஞரணி சார்பாக மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட இளைஞர்ணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
இளைஞரணி மாநில துணை தலைவர் குமார் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில செயலாளர் கார்த்தியாயிணி, மாவட்ட தலைவர் தசரதன், மகளிர் அணி மாவட்ட தலைவி கிருஷ்ணகுமாரி இளைஞரணி செயலாளர்கள் ராஜேஷ், சரவணன், கனிமொழி திருமாறன், சத்திஷ், கிஷேர், சுகுணா, லஷ்மி, மாவட்ட துணை தலைவர்கள் ஜெகன், பொது செயலாளர்கள் பாஸ்கர், பாபு செயலாளர்கள் ஏழுமலை, மண்டல் தலைவர்கள் ஜெகன், ஓ.பி.சி. அணி செயலாளர் எஸ்.கே.மோகன் உள்பட சுமார் 200 பேர் கலந்துக்கொண்டனர்.






