search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fatima sana shaikh"

    பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    கடந்த சில நாட்களாக பாலிவுட்  திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது. தற்போது மூன்றாவதாக  பாத்திமா சனா  ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது. 

    பாத்திமா சனா ஷேக்

    இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான்  இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
    தங்கல், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படங்களில் இணைந்து நடித்த அமீர்கான் - பாத்திமா சனா சேக் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பாத்திமா விளக்கம் அளித்துள்ளார். #AamirKhan #FatimaSanaShaikh
    அமீர் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகி நல்ல வரவேற்புடன் வசூலை குவித்த படம் தங்கல். இந்த படத்தில் ஆமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பிறகு ஆமீர்கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் என்ற படத்திலும் நடித்தார்.

    ஆமீர்கானின் பரிந்துரையின்பேரில் தான் பாத்திமாவுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்பட்டது.

    பாத்திமா சனா ஷேக்கிற்கும், ஆமீர்கானுக்கும் இடையே கள்ளக்காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த கள்ளக்காதலால் ஆமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்சினையை உருவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால்ஆமீர்கான் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

    பாத்திமாவின் விஷயத்தில் ஆமீர்கான் அதிக அக்கறை காட்டுவதாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் பேச்சு கிளம்பியது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் கண்டுகொள்ளவில்லை.



    ஆமீர்கானுடனான காதல் பேச்சு குறித்து பேட்டி ஒன்றில் பாத்திமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

    இந்த வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் அவர் என்னிடம் 'உன் புகைப்படம் வந்து இருக்கிறது' என்று எனக்குக் காட்டினார். 'என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தலைப்பைப் படித்து காட்டினார். நான் கலங்கினேன், இந்த வதந்தி குறித்து நானே விளக்க வேண்டும் என நினைத்தேன்.

    யாராவது உங்களை ஏதாவது குற்றம்சாட்டினால், முதல் உள்ளுணர்வு வெளியே வந்து இதுபோன்று ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கோபக்கார நபராக இருந்தால், நீங்கள் அவரை தாக்குவீர்கள். நீங்கள் அமைதியானவராக இருந்தால் நீங்களும் அதைப் பற்றி பேசுவீர்கள் என கூறினார்.

    நான் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டேன். மக்கள் எதையாவது கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை. நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

    தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படத்தில் ஆமீரின் பரிந்துரையால் பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததை பார்த்து கத்ரீனா கைப் கடுப்பானாராம். அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AamirKhan #FatimaSanaShaikh

    விஜய் கிருஷ்ண ஆச்சர்யா இயக்கத்தில் அமீர் கான், அமிதாப் பச்சன் - கேத்தரீனா கெய்ஃப், பாத்திமா சனா சைக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தின் விமர்சனம். #ThugsOfHindostanReview #AamirKhan
    1795-ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு இடங்களை கைப்பற்றி, அவர்களது ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்தி வந்தார்கள். அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படாமல் இருந்த குறுநில ராஜ்ஜியம் ரோனக்பூரை ஆங்கிலேயர்கள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள்.

    இதற்கு அடிபணியாத ஆங்கிலேயர்கள் அவர்கள் மீது போர் தொடுத்து அந்நாட்டு மன்னர், ராணி, மன்னரின் மகன் ஆகியோரை கொன்று விடுகிறார்கள். இதில் மன்னரின் மகள் பாத்திமா சனா சைக்கை புரட்சியாளரான அமிதாப்பச்சன் ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்றுகிறார்.



    11 வருடங்கள் கழித்து மன்னரின் மகளை வீரமங்கையாக வளர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட வைக்கிறார் அமிதாப்பச்சன். இவர்கள் தனிப்படையாக உருவாகி, தாங்கள் இழந்த நாட்டை கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். இதையறிந்த ஆங்கிலேயர்கள், ஊரில் சின்ன சின்ன திருட்டு, ஏமாற்று வேலைகளை செய்து வரும் அமீர்கானை, அவர்களுடன் இணைந்து காட்டிக்கொடுக்க சொல்லி அனுப்புகிறார்கள்.

    இறுதியில் ஆங்கிலேயர்கள் அமிதாப்பச்சனின் படைகளை அழித்தார்களா? பாத்திமா சனா சைக் தனது பகையை தீர்த்து கொண்டாரா? அமீர்கான் காட்டி கொடுக்கும் வேலையை செய்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. 



    படத்தில் ஆசாத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அமிதாப்பச்சன், பாகுபலி படத்தின் சத்யராஜ் கதாபாத்திரத்தை ஞாகப்படுத்துகிறார். வயதானாலும் அவரது சுறுசுறுப்பான நடிப்பு வியக்க வைக்கிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு ஆங்கிலேயருக்கு உளவு சொல்லும் உளவாளியாக நடித்திருக்கிறார் அமீர்கான். வித்தியாசமான தோற்றத்தில் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை கலகலப்பாக கொண்டு சென்றிருக்கிறார் அமீர்கான். ஆங்கிலேயர் ஆதிக்கத் திமிரை தன் பார்வை மூலமே மிரட்டி இருக்கிறார் லாயிட் ஓவன்.

    புரட்சிக்கார பெண்ணாக நடித்திருக்கும் பாத்திமா சனா ஷேக், ஆங்கிலேயர்களை எதிர்த்து தாக்குவதும், வாள் வீசுவதும் என நடிப்பில் அசத்தி இருக்கிறார். இரண்டு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் கேத்ரினா கைப். அழகாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    வரலாற்று படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சர்யா. சண்டைக்காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கிறார். பல இடங்களில் சுவாரஸ்யமான காட்சிகளை வைத்து தொய்வில்லாமல் கொடுத்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மற்ற படங்களின் ஞாபகம் வந்தாலும் பெரியதாக தெரியவில்லை.

    ஹேமந்த்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளை நமக்கு அழகாக காண்பித்திருக்கிறார். அஜய்யின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைத்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ பிரம்மாண்டம். #ThugsOfHindostanReview #AamirKhan #AmitabhBachchan #KatrinaKaif 

    ×