என் மலர்
திருவண்ணாமலை
ஊரடங்கு அமலில் உள்ளதால் சுயகட்டுப்பாடுகளுடன் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு குறித்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் சோதனை சாவடி, ஈசான்ய மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறிய வணிக வளாகங்கள், கடைகள் என இதுவரை 1,135 கடைகளுக்கு அபராதமும், 176 கடைகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வருவாய்த்துறை, சுகாதார துறையினருடன் இணைந்து முகக்கவசம் அணியாத 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
உரிய காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்லக்கூடாது. பொதுமக்களே சுயகட்டுப்பாடுகளுடன் வெளியே செல்வதை குறைத்து கொள்ள வேண்டும். இதனால் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ள 16 சோதனை சாவடிகள் மட்டும் இல்லாமல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், நகர பகுதிகளிலும் என 76 இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் வாகனங்களில் வருபவர்களிடம் அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் தான் செல்ல அனுமதிக்கின்றனர். தகுந்த காரணங்கள் இல்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுவரை 1,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தூசி அருகே விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 56 கேன்களில் இருந்த எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் சாராய வியாபாரி மணி என்பவரது வீட்டில் எரி சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தூசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தூசி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், கலால் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள விளை நிலங்களில் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 56 கேன்களில் இருந்த எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மணி மகன் மோகன்ராஜ், பாலமுருகன், குணசீலன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் மினிவேனை பறிமுதல் செய்தனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த தச்சூர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தச்சூர் காலனி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் (வயது 25), ஆனந்தன் மகன் மணிகண்டன் (23) ஆகிய இருவரும் மினி வேனில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மினி வேனை பறிமுதல் செய்தனர்.
ஆரணியில்10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிள்களில் சுற்றித்திரிந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
ஆரணி:
ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், அலுவலக மேலாளர் நெடுமாறன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன், அலுவலர் குமார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திறந்திருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கடைகளை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிள்களில் சுற்றித்திரிந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை 10-ம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வந்தவாசி :
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களின் மகள் மீனா. 10-ம் வகுப்பு மாணவி. ராமச்சந்திரன் நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ளார். தனது தேவைக்கு போக அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிக்கு செல்லாத ராமச்சந்திரனின் மகள் மீனா, தனது அப்பாவுக்கு உதவியாக ஏர் ஓட்டுவது, தண்ணீர் இறைப்பது, நாற்று நடுவது உள்ளிட்ட பணிகளை செய்துவந்துள்ளார்.
அதேபோன்று அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் நெற்பயிரையும் அறுவடை எந்்திரத்தை இயக்கி அறுவடை செய்து அசத்தி வருகிறார். பள்ளி, கல்லூரிகளில் விடுமுறையில் வீணாக ஊர் சுற்றும் மாணவர்கள் மத்தியில் ஆண்கள் மட்டுமே இயக்கி வரும் அறுவடை இயந்திரத்தை 10-ம் வகுப்பு மாணவி மீனா இயக்குவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கீழ்பென்னாத்தூரில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி ராஜபிரியா (வயது 28). சுரேஷ்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து கடந்த 10-ந்தேதி ராஜபிரியா மேலத்தாங்கலில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு கணவர் சுரேஷ்குமாரை அழைத்து வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழ்பென்னாத்தூரில் உள்ள சுரேஷ்குமார் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து சுரேஷ்குமாரின் அண்ணன் புகழேந்தி போனில் ராஜபிரியாவிற்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக ராஜபிரியா வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் ராஜ பிரியா புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

வந்தவாசி, போளூர், ஆரணியில் 5 மாத கர்ப்பிணி உள்பட 7 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக இறந்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கடைசிகுளம் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மேல்மருத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ெதாற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார்.
கொரோனாவுக்கு கர்ப்பிணி பலியானதை அறிந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் கடைசிகுளம் கிராமத்தில் தூய்மை பணி நடந்தது. அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மணிமேகலை, ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடைசிகுளம் கிராமத்துக்கு வந்து கொரோனா பரிசோதனை முகாமை நடத்தினர். இந்த முகாமில் கிராம மக்களுக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.
மேலும் டாக்டர் மணிமேகலை கிராம மக்களுக்கு கொரோனா பரவலை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கொரோனாவுக்கு கர்ப்பிணி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல போளூர் பேரூராட்சியில் கொரோனா பாதிப்பால் கணபதி தெருவை சேர்ந்த ராமலிங்கம், இந்திரா நகரை சேர்ந்த புருஷோத்தமன், கன்னிகா பரமேஸ்வரி தெருவை சேர்ந்த மேகலா ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.
போளூர் பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களில் 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.
போளூர் அரசு ஆஸ்பத்திரியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆரணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஏ.தஸ்தகீர் (வயது 65), வக்கீல் சங்க முன்னாள் தலைவர். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இவரது சொந்த ஊரான வந்தவாசியில் உள்ள மயானத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதேபோல ஆரணி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக இளநிலை உதவியாளராக சந்தவாசல் அருகே கேசவபுரத்தைச் சேர்ந்த நாராயணசாமி (50) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் ஆரணி அருணகிரி சத்திரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (75) என்பவர் கொரோனாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (80) கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டவலம் அருகே நாதஸ்வர கலைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). நாதஸ்வர கலைஞர். இவர் கடந்த 11-ந் தேதி நாதஸ்வர நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் வாங்கி வருவதாக கூறிச்சென்றார். பின்னர் முருகன் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வெண்ணியந்தல் செல்லும் சாலையில் உள்ள சம்பத் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அப்பகுதியை சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தவர் காணாமல்போன நாதஸ்வர கலைஞர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் சென்று முருகனின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
அவரது உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருடைய மனைவி காஞ்சனா வேட்டவலம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசியில் மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வந்தவாசி:
வந்தவாசி நெமந்தகார தெருவில் வசித்து வந்தவர் பலராமன் (வயது 70). இவருக்கு குடி பழக்கம் உண்டு. சம்பவத்தன்று அவர் தனது மனைவி தனவள்ளியிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தராததால் மனமுடைந்த பலராமன் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை, குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பலராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வந்தவாசி தெற்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகர் புறங்களில் அதிகரித்து வந்த கொரோனா தற்போது கிராம புறங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை விரட்ட பொதுமக்கள் பல்வேறு நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தீ மூட்டினர். மேலும் வீடெங்கும் மஞ்சள் நீர் கரைசல் தெளித்து, வீட்டின் வாசற்படியில் வேப்பிலை கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில்:-
படவேடு கிராமத்தில் ஒரு பெண் அருள் வந்து ஆடினார். அப்போது அவர் கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு தேங்காய் உடைத்து, தீ மூட்டி, மஞ்சள் நீர் கரைசல் தெளித்து வீட்டின் முன்பு வேப்பிலை தோரணம் கட்டவேண்டும் என்றார்.
இதனால் நாங்கள் வீடுகள் முன்பு நெருப்பு மூட்டி, மஞ்சள்நீர் கரைத்து வழிபட்டோம் என்றனர்.
கொரோனா ஒழிய வேண்டி ஆம்பூரில் நேற்று முன்தினம் வீட்டு முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
இந்நிலையில் கண்ணமங்கலத்தில் பெண்கள் வீடுகள் முன்பு தீ மூட்டி வழிபட்டுள்ளனர்.

போளூர் அருகே இளம்பெண் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போளூர்:
போளூரை அடுத்த திருசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், கட்டிட மேஸ்திரி. இவருக்கும், போளூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகள் திலகவதிக்கும் (22) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை. ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவர் பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜேந்திரனை வேலைக்கு செல்லுமாறு திலகவதி கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், திலகவதியிடம் உன் தாய் வீட்டுக்குச் சென்று பணம் வாங்கி வா எனக் கூறினார்.
அதில் மனமுடைந்த திலகவதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திலகவதியின் தாயார் சங்கீதா, தனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது, எனக் கூறி போளூர் போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார்.
போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகர பகுதியில் அரசு அறிவித்தப்படி மளிகை, காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்டவை திறந்து இருந்தது. இதனால் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் சாலையில் காணப்பட்டது. முழு ஊரடங்கு போன்றே தெரியவில்லை. மாலையில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் சிலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தபடி இருந்தனர். சில பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் 600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 603 ேபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 24 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 325 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொேரானா தொற்றால் 336 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
போளூர் பேரூராட்சி மற்றும் கிராமங்களில் 2 நாட்களில் 7 வயது சிறுமி உள்பட 68 பேருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, போளூரில் 63 வயதான மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியானார்.
தொற்று பாதித்தவர்களை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் மற்றும் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போளூர் பேரூராட்சியில் துப்பரவு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தும், சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கம் பகுதிகளில் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கம் பகுதியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.