search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலி - ஒரே நாளில் 600 பேருக்கு தொற்று

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பேர் பலியானார்கள். ஒரே நாளில் 600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகர பகுதியில் அரசு அறிவித்தப்படி மளிகை, காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்டவை திறந்து இருந்தது. இதனால் வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் சாலையில் காணப்பட்டது. முழு ஊரடங்கு போன்றே தெரியவில்லை. மாலையில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் சிலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தபடி இருந்தனர். சில பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் 600 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    நேற்று வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 ஆயிரத்து 603 ேபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 24 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 325 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொேரானா தொற்றால் 336 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அரசு அறிவிக்கும் விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    போளூர் பேரூராட்சி மற்றும் கிராமங்களில் 2 நாட்களில் 7 வயது சிறுமி உள்பட 68 பேருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, போளூரில் 63 வயதான மூதாட்டி கொரோனா தொற்றுக்கு பலியானார்.

    தொற்று பாதித்தவர்களை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் மற்றும் ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    போளூர் பேரூராட்சியில் துப்பரவு ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தும், சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    செங்கம் பகுதிகளில் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கம் பகுதியில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
    Next Story
    ×