என் மலர்
செய்திகள்

கடைகளுக்கு சீல்
ஆரணியில் 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
ஆரணியில்10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிள்களில் சுற்றித்திரிந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
ஆரணி:
ஆரணி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், அலுவலக மேலாளர் நெடுமாறன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மோகன், அலுவலர் குமார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திறந்திருந்த கடைகளை மூடுமாறு வலியுறுத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கடைகளை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்த 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் தேவையில்லாமல் மோட்டார்சைக்கிள்களில் சுற்றித்திரிந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
Next Story






