என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது - மினிவேன் பறிமுதல்
ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் மினிவேனை பறிமுதல் செய்தனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த தச்சூர் ஆற்றுப்பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தச்சூர் காலனி பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் மணிகண்டன் (வயது 25), ஆனந்தன் மகன் மணிகண்டன் (23) ஆகிய இருவரும் மினி வேனில் மணல் கடத்தி வந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மினி வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story






