என் மலர்
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை (வயது 65), விவசாயி. இவரது மகன் முனுசாமி (43). சென்னையில் மளிகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிறுநாத்தூர் சிவம் நகரில் முனுசாமி வீடு கட்டியுள்ளார். விசேஷ நாட்களில் குடும்பத்துடன் முனுசாமி தனது வீட்டிற்கு வந்து செல்வாராம். நேற்று காலையில் முனுசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை - பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கோவை:
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் முன்னிலை வகித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் அரசு மற்றும் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பி.எச்.டி. மாணவர்கள் 108 பேர், முதுநிலை முடித்த மாணவர்கள் 260 பேர், இளநிலை மாணவர்கள் 2,202 பேர் உள்பட மொத்தம் 2,602 மாணவ, மாணவிகளுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.
இதில் மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி கழக தலைமை இயக்குனர் திருலோச்சன் மொகபத்ரா, பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பட்டம் வாங்க கூடிய மாணவ, மாணவிகள் அனைவரும் காலையிலேயே பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். 9 மணிக்கு மாணவர்கள், விழா அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
விழாவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.
பட்டமளிப்பு விழா முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். கவர்னரின் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,294ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,687 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குரு பூஜை நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 -வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தேவர் பேரவையின் மாநிலத் தலைவர் பசும்பொன் மு.முத்தையா தேவர் நிர்வாகிகளுடன் சென்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தேவரின் ஜெயந்தி விழாவை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நிகழ்ச்சி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
மகா தீபத்திற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக நெய் காணிக்கை செலுத்துவர். தீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களிடம் நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் 2 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில், நெய் காணிக்கையாக 1 கிலோவிற்கு ரூ.250-ம், அரை கிலோவிற்கு ரூ.150-ம், கால் கிலோவிற்கு ரூ.80-ம் வசூலிக்கப்படுகிறது.
பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கை பணத்திற்கு கோவில் நிர்வாகம் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் முடிந்த பிறகு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களின் ரசீதை கோவில் அலுவலகத்தில் காண்பித்து தீப ‘மை’ பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தினர்.
மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் மதுரையை சேர்ந்த அன்னை மீனாட்சி உழவார பணி குழு மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் - 4
எலுமிச்சை - அரை பழம்
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும்.
இந்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

சூப்பரான ஆப்பிள் எலுமிச்சை ஜூஸ் ரெடி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 15 பேருக்கு தொற்று உறுதியானது.
நேற்று வரை 189 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 ஆயிரத்து 94 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மதுரையைச் சேர்ந்த அன்னை மீனாட்சி உழவாரபணி குழு சார்பில் பக்தர்கள் உழவாரப்பணி செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா புகழ் பெற்றது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் தீபத் திருவிழா அன்று கோவிலில் சாமி தரிசனம்செய்யவும், பரணி தீபம் காணவும் அனுமதிக்கப்படவில்லை. திருவிழா காலத்தில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் உள்ளூர் பக்தர்கள் வெளியிலிருந்தே மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மகா தீபம் வருகிற நவம்பர் 19-ந்தேதி ஏற்றப்படுகிறது. இதையொட்டி கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மகா தீபத்திற்கு பக்தர்களிடம் நெய் காணிக்கை பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பக்தர்கள் ஒரே நாளில் 3,500 கிலோ நெய் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இன்னும் 2000 கிலோ நெய் மட்டும் தேவைப்படுகிறது. அதுவும் விரைவில் காணிக்கையாக வந்துவிடும் என்று கூறப்படுகிறது. கோவிலில் நெய் காணிக்கையாக ஒரு கிலோவிற்கு ரூ.250,அரை கிலோவுக்கு ரூ.150, கால் கிலோவுக்கு ரூ.80 வசூலிக்கப்படுகிறது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மதுரையைச் சேர்ந்த அன்னை மீனாட்சி உழவாரபணி குழு சார்பில் பக்தர்கள் உழவாரப்பணி செய்தனர்.

தூசி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பெரிய ஏழாச்சேரி ரோடு தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 42), விவசாயி. இவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மதுபானத்துக்கு அடிமையான அவர் உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனசேகரன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து, பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிதீன் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரில் கயிறு கட்டி பற்களால் கடித்து இழுத்து சித்த மருத்துவர் சாதனை படைத்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் தீபமலை ஆன்மிக தொண்டு இயக்கம் ஆகியவை இணைந்து பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நீதிபதி கிருபாநிதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
இதில் சித்த மருத்துவர் ராஜாஹரிகோவிந்தன் (வயது 44) என்பவர் பாலிதீன் ஒழிப்பு மற்றும் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரில் கயிறு கட்டி விரல் மற்றும் பற்களால் கடித்து இழுத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டார். அவரது சாதனையை பலர் பாராட்டினர்.
முடிவில் யோகா பயிற்சியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29), வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் சதீஷ் மோட்டார் சைக்கிளில் செய்யாறு நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சதீசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சதீஷ் கொடுத்த தகவலின் பேரில் அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியான நபர்கள் எச்சூர் கிராமத்தில் 2 நாட்களாக தங்கி இருப்பது தெரியவந்தது. வீட்டிற்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை பார்த்த சதீஷ் மர்ம நபர்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிள் இதுதான் என உறுதி படுத்தியதால் அனக்காவூர் போலீசார் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சதீஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும், வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (21), சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (20), லோகேஷ் (20), ராகுல் (21) என்பதும், அவர்கள் தங்குவதற்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் (22) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் தினக்கூலிகளாக வேலை செய்வதும், 2 நாட்களுக்கு முன்பு எச்சூரில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் வீட்டில் வந்து தங்கி நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிள், 3 கத்தி, தங்க சங்கிலி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா ஒரத்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காவியா (வயது 26). இவர், முருகனின் 2-வது மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 26-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனமுடைந்த காவியா விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காவியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முருகனின் முதல் மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.