என் மலர்
திருவண்ணாமலை
செங்கம் குப்பநத்தம் அருகே அருவிக்கு குளிக்க சென்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
புதுப்பாளையம்:
செங்கம் அருகே குப்பநந்தம் துரிஞ்சாபுரம் நாமக்கல் நீர்வீழ்ச்சி உள்ளது. தொடர் மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு நேற்று வந்துள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அருவியில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பாய்ந்தோடி சென்றது. அருவிக்கு குளிக்க சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை கயிறு கட்டி மீட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
அருவிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததால் இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீபாவளி அன்று வேலைக்கு சென்ற பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் மூலிகை மருந்து கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமாதேவி (28). அந்தப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடை ஊழியர் முத்துப்பாண்டியுடன் அடிக்கடி பேசினாராம். இதனை செல்லத்துரை கண்டித்துள்ளார்.
தீபாவளியன்று உமா தேவி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இன்று திரும்பி வர நேரமாகும் என கூறிச் சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் உமாதேவி வீடு திரும்பாததால் கணவர் செல்லத்துரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இணையதளத்தில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 19-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அதிகளவு மக்கள் கூடும் திருவிழாக்களை நடத்த அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது. அதன்படி திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ந் தேதி (நாளை) முதல் தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். தரிசன அனுமதி 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும், 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதையொட்டி இ-பாஸ் பெறுவதற்கான ஆன்லைனில் முன்பதிவு செய்ய இணையதளம் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்படத் தொடங்குகிறது.
அதனால் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in மற்றும் www.tnhrce.gov.in இணைய தளங்களில் தரிசனம் செய்ய விரும்பும் நாள், நேரம், ஆகியவற்றை தேர்வுசெய்து இ-பாஸ் பெறலாம். அப்போது ஆதார் எண், முகவரி, செல்போன் எண், இரண்டு தவணை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் போன்றவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.

இந்த தகவலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிக்கலாம்...கந்த சஷ்டி விரதத்தின் போது சொல்ல வேண்டிய திருப்புகழ்
இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் சிவாலயம் உள்ளது. இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில், குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நடை சாத்தப்படும்.
அவ்வகையில் குளிர்காலத்தை ஒட்டி இன்று கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று காலையில் சிறப்பு வழிபாட்டு விழாவிற்கு பின்னர் காலை 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும்.
இந்த சார் தாம்களில் பத்ரிநாத் கோவில் வரும் 20ம் தேதி நடை சாத்தப்படுகிறது. கங்கோத்ரியில் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.
இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 22ம் தேதி வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டதாக சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... 2 தடுப்பூசி போட்டவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதி: பயண கட்டுப்பாடுகள் நீக்கம்
செய்யாறில் கால்வாயில் தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறு கொடநகர் பை-பாஸ் சாலையில் இன்று காலை சிறிய பாலத்திற்கு அடியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் உள்ளதாக பொதுமக்கள் பார்த்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது இறந்தவர் செய்யாறு டவுன் சமாதியான குளத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 44), என்பதும் அவருக்கு அம்பிகா என்ற மனைவியும் ரஞ்சித், ஹரிபிரசாத், லோகேஸ்வரி என்ற மகன்களும், ஒரு மகள் உள்ளதாகவும், இறந்த ராஜாவிற்கு மதுப்பழக்கம் உள்ளதாகவும் எனவே மதுவினால் மயக்கம் ஏற்பட்டு விழுந்தாரா அல்லது அவர் இறப்புக்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்று விசாரணை செய்து வருகின்றனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உப்பிலியபுரத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆர்.புதுப்பட்டி கவுண்டர் தெருவைச்சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 45) விவசாயி. இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், விக்னேஷ் வயது 23 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று தீபாவளியன்று அதிகாலையில் புதுப்பட்டி- ஒக்கரைக்கிடையே அமைந்துள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது மோட்டார் பம்புக்கு செல்லும் வயரில் உள்ள மின்கசிவு தெரியாமல் வயரை மிதித்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று ரவிச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலையில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது கருங்காலிகுப்பம் சுடுகாடு அருகே பஸ் வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுகன்ராஜ் (வயது27), பிரகாஷ் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் முந்தும்போது உரசிகொண்டுள்ளன. இதனால் கோபமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பஸ்சின் பின்புற கண்ணாடி மீது கல் வீசினர். டிரைவர், கண்டக்டரையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். வாலிபர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுபானங்கள், பீர் வகைகள் அதிகளவில் விற்பனை ஆனது.
அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரிப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் தடிக்காரன்கோணம் அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், அத்திக்கடை பகுதியில் மதுவிற்பனை செய்த தர்மலிங்கம் (45) என்பவரை கைது செய்தார். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் கோட்டார் வயல் தெரு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்ற யேசுதாஸ் (70) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ரஞ்சித் ரத்தினத்தை கைது செய்தனர். இவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கம் அருகே ஓடையை கடக்க முயன்ற விவசாயி நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்:
செங்கத்தை அடுத்த செ.சொர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 60), விவசாயி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்துக்குச் செல்வதற்காக நேற்று கிராமம் அருகில் உள்ள ஒரு ஓடையை கடந்து செல்ல முயன்றார்.
மழையால் ஓடையில் அதிகளவில் தண்ணீர் ஓடியதால் தர்மலிங்கம் கடந்து செல்ல முடியாமல் எதிர்பாராதவிதமாக ஓடை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாய்ச்சல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, தர்மலிங்கத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 181 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 379 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,842 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன், வேலு மற்றும் போலீசார் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டு அருகே உள்ள அனாதிமங்கலம் ஏரிக்கரையில் வேகமாக வந்த 2 சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து, சேத்துப்பட்டு அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியாண்டவர் (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கம் துரை (25) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 179 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 ஆயிரத்து 122 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.