search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்றது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. மதுபானங்கள், பீர் வகைகள் அதிகளவில் விற்பனை ஆனது.

    அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீரிப்பாறை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் தடிக்காரன்கோணம் அண்ணா நகர் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 13 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், அத்திக்கடை பகுதியில் மதுவிற்பனை செய்த தர்மலிங்கம் (45) என்பவரை கைது செய்தார். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் கோட்டார் வயல் தெரு பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மது விற்ற யேசுதாஸ் (70) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் தம்மத்துகோணம் குருகுலம் சாலையில் ரோந்து சென்றபோது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த ரஞ்சித் ரத்தினத்தை கைது செய்தனர். இவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×