என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாமி உலா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.
    சென்னை

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்’ என்று பேசி இருக்கின்றார். மேலும் ‘உள்துறை அமைச்சகத்தின் ஒரு கோப்பு கூட இப்போது ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை’ என்று அவர் கூறி இருப்பது, அரசு அமைப்பு சட்டத்துக்கு எதிரான அடக்குமுறை போக்கு ஆகும்.

    உள்துறை அமைச்சகத்தில் இருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால், தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டும். வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அயல்நாட்டு மொழி என்றால், நமக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான். எனவேதான், தந்தை பெரியார், ‘வெள்ளையன் வெளியேறுகின்றான்; ஆனால் தமிழன் இந்திக்காரனுக்கு அடிமை ஆகின்றான்’ என்று சொன்னார். அந்த நிலைமைதான் இன்றைக்கும் நீடிக்கின்றது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தத் காலத்திலும், இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுத்துவிடக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ராணி சகுந்தலா என்பவரின் மகள் ‌ஷர்மிளா (22) கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பார்த்தீபன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு லிங்கேஸ்வரன் என்ற மகனும் (2) லிதிஷா (2) என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ‌ஷர்மிளா அண்ணன் சார்லஸ் என்பவருக்கு செல்போன் மூலம் பார்த்தீபனின் உறவினர் தொடர்பு கொண்டு தங்கையை பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.

    இதனால் சார்லஸ் மற்றும் ‌ஷர்மிளா தாயார் ராணி சகுந்தலா ஆகியோர் அக்ராபாளையம் கிராமத்திற்கு சென்ற போது ‌ஷர்மிளா வீட்டில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது சம்மந்தமாக பார்த்தீபன் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதிலக்கவில்லை. மேலும் இது சம்மந்தமாக ராணி சகுந்தலா மற்றும் உறவினர்கள் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு அளித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து ‌ஷர்மிளாவின் கணவர் பார்த்தீபனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த 6-ந்தேதி முதல் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை நகரமே வெள்ளக்காடானது. ஒரு வாரம்தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    சென்னையில் மழை நீர் வடிகால் சரிவர தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாததற்கு முக்கிய காரணம் ஆகும் என்று கூறப்பட்டது.

    இதுபற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீர் வடிகால் சரிவர தூர்வாரப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்- அமைச்சரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். அவர் கூறுகையில், ‘தி.மு.க. அரசு மழை நீரை அகற்ற முடியாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்’ என்றார்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், ‘அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றச்சாட்டுகளை கூறி தங்களுக்கான பொறுப்புகளை ஆளுகின்றவர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது’ என்று கூறினார்.

    இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மழை நீர் வடிகால் அமைத்ததில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமி‌ஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-


    வெள்ளம்


    கேள்வி:- கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதே, அங்கு நேரில் பார்வையிட செல்வீர்களா?

    பதில்:- கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட நாளை (திங்கட்கிழமை) செல்லலாம் என முடிவு செய்துள்ளேன்.

    கேள்வி:- மழைசேத விவரம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத வாய்ப்புள்ளதா? எவ்வளவு பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது?

    பதில்:- மொத்த சேத கணக்கு வந்தபிறகுதான் அதை தயார் செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம். தேவைப்பட்டால் இங்கு இருக்கிற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் நேரடியாக சென்று கோரிக்கைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம்.

    கேள்வி:- புளியந்தோப்பு, பட்டாளம் பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதே?

    பதில்:- மழைநீர் தேங்கியது உண்மைதான். ஆனால் விரைவாக மழை நீரை அப்புறப்படுத்தி இருக்கிறோம்.

    கேள்வி:- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்:- நான் அதைப்பற்றி கவலைப்படுவது கிடையாது. என்னுடைய வேலை மக்களுக்கு பணியாற்றுவது. ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல, ஓட்டுபோடாத மக்களுக்கும் சேர்த்து வேலை செய்வதுதான் எனது கொள்கை. அந்த வழியில் எங்களது பயணம் இருக்கும்.

    எதிர்க்கட்சிகள் என்ன புகார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் செய்த அக்கிரமத்தை, அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று விசாரணை கமி‌ஷன் வைக்கப்பட்டு எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளது என்பதை கண்டறிந்து யார் குற்றவாளிகளோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் நாள் தீபத்திருவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. மேலும் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 10-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    தொடந்து 3-ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ள வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது.

    மேலும் 3-ம் நாள் விழாவையொட்டி கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் மகா யாகம் நடைபெற்றது. முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா யாகம் முடிந்த பிறகு புனித நீர் கொண்டு அருணாசலேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது.

    ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடி மரம் அருகில் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.
    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தது, பிட்காயின் முறைகேடு போன்றவற்றால் பா.ஜனதாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ‘‘முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை மாற்றும் பேச்சுக்கே இல்லை. அவர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதனால் அவர் முதல்-மந்திரி பதவியில் நீடிப்பார்’’ என்றார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2-ம் நாள் தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அன்று காலை மற்றும் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா நடைபெற்றது.

    தொடர்ந்து 2-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.

    இதற்கிடையில் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. கொட்டும் மழையில் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கையில் குடையுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுமார் 8 மணியவில் கோவில் வளாகத்தில் பஞ்சமூர்த்திகள் உற்சவ உலா நடைபெற்றது. கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    கடந்த 1-ந்தேதி கடையில் விற்பனையான ரூ. 9.13 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ராஜபிரகாஷ் செல்ல முயன்றார்.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் காசிபாளையத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ராஜபிரகாஷ் மேற்பார்வையாளராகவும், ரமேஷ் என்பவர் விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர். 
     
    கடந்த 1-ந்தேதி கடையில் விற்பனையான ரூ. 9.13 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ராஜபிரகாஷ் செல்ல முயன்றார். அப்போது கடையின் அருகில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 9.13 லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனர். 

    இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நெல்லை மாவட்டம்  திசையன்விளையை சேர்ந்த செந்தில்குமார் ( வயது 21), சிங்கிலிகுளத்தை சேர்ந்த பவித்ரன் (19), அதே ஊரை சேர்ந்த மணி கண்டன் (23), ஈரோடு கருங்கல் பாளையத்தை சேர்ந்த குமார் (30) ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தலை மறைவாக இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 6.10 லட்சம், பட்டா கத்தி, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. 

    இந்த வழக்கில் கைதான செந்தில்குமார் மீது சென்னை, ஈரோடு, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, கொலை தொடர்பாக 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல மணிகண்டன், பவித்ரன் மீது நெல்லை, களக்காடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. 

    செந்தில்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டாஸ்மாக் கடைகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். நண்பர் குமாரை பார்ப்பதற்காக பவித்ரன், மணிகண்டனுடன் ஈரோடு வந்த செந்தில்குமார் பெருந்துறையில் 2 மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு திருப்பூர் வந்துள்ளனர்.

    திருப்பூர் காசிப்பாளையம் டாஸ்மாக்  கடையை 4 பேரும் 2 நாட்களாக நோட்ட மிட்டுள்ளனர். அப்போது மேற்பார்வையாளர் ராஜ பிரகாஷ், சனி, ஞாயிறு  வங்கி விடுமுறை என்பதால் விற்பனை பணத்தை கடையிலேயே வைத்துள்ளதும், திங்கட்கிழமை பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. 

    அதன்படி கடந்த 1-ந்தேதி (திங்கட்கிழமை) டாஸ்மாக் கடைக்கு  சென்ற 4 பேரும் ராஜ பிரகாஷ் வருகைக்காக காத்திருந்துள்ளனர். அவர் கடைக்கு வந்து ரூ.9.12 லட்சத்தை பேக்கில் எடுத்து கொண்டு வங்கிக்கு புறப்பட்டார். காரில் ஏற முயன்ற போது 4 பேரும் பணம் வைத்திருந்த பேக்கை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். 

    இதில் ரூ.2.50 லட்சத்தை குமாரிடம் கொடுத்து விட்டு, 3பேரும் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டனர். அங்கு நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து பார்வையிட்ட போது 4 பேரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்வங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா முக்கியமானது.

    ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் விழாவில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த கார்த்திகை தீபத்தின்போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்புள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் கொடி ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியை ஏற்றினர்.

    இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் ஊழியர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியை காண கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உள்ளூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வெளியில் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.

    கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள்.

    மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்த வெளியூர் பக்தர்களும் கொடியேற்றும் நிகழ்ச்சியை காண அனுமதிக்கப்படவில்லை. கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    முதல் திருவிழா நாளிலேயே வெளியூர் பக்தர்கள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    முன்னதாக நேற்று கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இரவு விநாயகர் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கொடியேற்றத்தை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இன்று இரவு சாமி வீதிஉலா கோவில் பிரகாரத்திலே நடக்கிறது.

    தீபவிழாவின் உச்ச நிகழ்வாக 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    சென்னை:

    சென்னையில் முக்கிய பகுதிகளில் தரையில் புதைக்கப்பட்ட கேபிள் வழியாக மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் மின் கம்பங்கள் மூலமாக சப்ளை செய்யப்படுகின்றன.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தண்ணீர் தரைவழி மின்சார கேபிள்களில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    மேலும் மின் கம்பங்களிலும் கசிவுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் காரணமாகவும் வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    கடந்த திங்கட்கிழமை 206 டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அவை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள 12,200 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    நேற்று இதே போல 96 டிரான்ஸ்பார்மர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் 4,650 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நிலைமை சீரான பகுதிகளில் மின்சப்ளை மீண்டும் வழங்கப்பட்டது.

    மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புளியந்தோப்பு, பெரம்பூர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீபத்திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவில் சாமி உலா கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் வீதிஉலாவின் போது சாமிக்கு பயன்படுத்தப்படும் திருக்குடைகள் சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா ஆன்மிக சேவா சங்கத்தால் வழங்கப்படுகிறது இந்தாண்டும் சேவா சங்கத்தினர் சார்பில் நேற்று கோவிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

    முன்னதாக மாட வீதியில் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற்றது. ராஜகோபுரம் முன்பு திருக்குடைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வீதி உலா நடந்தது. மேளதாளங்கள் முழங்க நடந்த வீதிஉலாவிற்கு பின்னர் திருக்குடைகள் அருணசலேஸ்வரர் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.
    வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், இன்றும், நாளையும் வடதமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    ×