என் மலர்
திருவண்ணாமலை
ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவாகும். வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதிகாலையில் தொடங்கி அன்று இரவு வரை தேரோட்டம் நடைபெறும். இதில், உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக கோவிலில் நிர்வாகம் சார்பில் ஆகம விதிகளின்படி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் ரதங்கள் பிரகார உலா வந்தது.
முன்னதாக அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு தேரோட்டம் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டு இருந்த சிறப்பு ரதங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை.
பின்னர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை காண ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அருகில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த குறைந்த அளவிலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து வழக்கமாக நடைபெறுவது போன்று முதலில் விநாயகர் ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து சிறிது தூரம் இழுத்தனர். தொடர்ந்து முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ரதங்களும் இழுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் பிரகார உலா நடைபெற்றது.
பஞ்சமூர்த்திகள் உலா காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க தொடங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவமும், நிறைவாக 23-ந்தேதி சண்டீகேஸ்வரர் உலாவும் நடைபெற உள்ளது.

வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் கண் மற்றும் தோலை பெற்றோர் தானம் செய்தனர்.
சென்னை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண். விவசாயி. இவரது மனைவி கமலாதேவி. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிப்புரிந்து வரும் இவர், தியாகராயநகரில் தனது 11 வயது மகள் ஹரிணியுடன் வசித்து வந்தார். ஹரிணி அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி ஹரிணி வீட்டின் 3-வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி 3-வது மாடியில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹரிணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் கண் மற்றும் தோல் பெற்றோரின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலசபாக்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த கப்பலூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 58) விவசாயி. இவரது இரண்டாவது மனைவி வளர்மதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த துரைராஜ் மனைவி வளர்மதியை விறகு கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய துரைராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஊருக்கு சிறிது தூரத்தில் துரைராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்முதல் நாள் இரவே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து துரைராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலகவுண்டம்பட்டி அருகே குடிபோதையில் அரசு பஸ்சை சேதப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தில் இருந்து கோலாரம் செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று புள்ளாகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் திடீரென டவுன் பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர். இதை தட்டி கேட்ட பஸ் டிரைவர் குமார் (46) என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து குமார் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பஸ்சை சேதப்படுத்தியவர்களை பிடிக்க முயன்றபோது அதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் வசந்தகுமார் (வயது 22), அத்தப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தப்பியோடிய சவுந்தர் என்ற பிரதீப்பை வலைவீசி (21) தேடி வருகின்றனர்.
வந்தவாசி அருகே 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த 102 வயது மூதாட்டி ஜீவசமாதி அடைந்தார்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 102). இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர்.
பொன்னுசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து செய்யாறு அடுத்த வேலியநல்லூர் கிராமத்திலுள்ள இளைய மகள் சுசிலா வீட்டில் கடந்த 43 ஆண்டுகளாக விஜயலட்சுமி வசித்து வந்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக எறும்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு மகள் நாகரத்தினம் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11-ந்தேதி வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்திலுள்ள குந்தகுந்தர் விசாகா சார்யர் தவ நிலையத்திற்கு சென்ற அவர் எவ்வித உணவுகளையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்டார். 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த அவர் ஜீவசமாதி அடைந்தார்.
பின்னர் உறவினர்கள் அதே பகுதியில் மூதாட்டி உடலை அமர்ந்த நிலையில் வைத்து கொப்பரைத் தேங்காய், தேங்காய் மூடி சந்தனக்கட்டை, நெய் மூலமாக எரியூட்டினர்.

கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உயிரிழந்த காவலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை 7மணி அளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்த நபர் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சீனு (41) என்பது தெரியவந்துள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான
7-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்திலேயே வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது. வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமியன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மதியம் 1.03 மணிக்கு தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத் தரிசனம் செய்யவும், நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிக்கலாம்....திருவண்ணாமலையும்.. ஒன்பது கோபுரங்களும்..
விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், 1,008 சங்கு பூஜை, கும்ப பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் விநாயகருக்கு கும்பாபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 1,008 சங்காபிஷேகமும், வருசாபிஷேகமும் நடந்தது. பின்னர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியில், சைவ வேளாளர் ஐக்கிய சங்க தலைவர், செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் ஞான சுந்தரம், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவையொட்டி நேற்று நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவில் கோவிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உலா வந்தனர்.
தொடர்ந்து 6-ம் நாள் விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக 6-ம் நாள் விழாவின் போது காலையில் 63 நாயன்மார்கள் உலா நடைபெறும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 63 நாயன்மார்கள் விழா நடைபெறவில்லை. இருப்பினும் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் நால்வருடன் விநாயகர், சந்திரசேகரர் உலா நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் நாள் அன்று நடைபெறும் தேரோட்டமும் ஒன்று. இந்த ஆண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால் 7-ம் நாள் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகம விதிகளின் படி கோவில் வளாகத்திற்கு வெள்ளி வாகனங்களில் சாமி உலா காலை சுமார் 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இன்று காலை 9 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. அதன்பின்னர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பெண் சாமியார் ஒருவர் தன்னை காளிமாதா என கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பெண் சாமியார் ஒருவர் வந்திருந்தார்.
அவர் சாதாரண சாமியார்களை போல இல்லாமல் மாடர்ன் உடையில் காட்சி அளித்தார். கண் இமையிலும், உதடுகளிலும் சாயம் பூசி இருந்தார். கழுத்து நிறைய நகைகளையும், நவநாகரிக பெண்கள் அணியும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்பும் அணிந்திருந்தார்.
தலைமுடியை வெள்ளை, செம்பட்டை நிறத்தில் கலரிங் செய்து இருந்த அவர், தான் ‘அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா’ பட்டம் பெற்றுள்ளதாகவும், தனது பெயர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா எனவும் கூறினார். மேலும் தன்னை சாமியார் என அழைக்கக்கூடாது எனவும், தான் காளி மாதா எனவும் சொல்லிக்கொண்டார்.
பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் அவரது சொந்த ஊர் எனவும், திண்டுக்கல்லில் தற்போது வசிப்பதாகவும், அவரின் சீடர்கள் தெரிவித்தனர்.
அந்த பெண் சாமியாருக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதாகவும், ஜெயலலிதா, அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசியதாகவும், எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றதாகவும் பெண் சாமியாருடன் வந்தவர்கள் கூறினர். ‘கலக்கலாக’ உடை அணிந்து ஊர்வலமாக சென்ற அந்த பெண் சாமியாரிடம் ஏராளமானோர் ஆர்வத்துடன் ஆசி பெற்றுக்கொண்டனர். பெரியவர், சிறியவர் என பாராமல் பலரும் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.
பின்னர் அந்த பெண் சாமியார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பயிர்கள் அழுகி விட்டன. இதற்கு மேல் விவசாயிகளுக்கு கஷ்டம் தரக்கூடாது. அம்மா நிறைந்த மனசோட சந்தோசமா இருக்கனும். எல்லோரையும் தீர்க்காயுசா, நல்லவிதமாக வைத்துக் கொள்ளனும். நாடு சுபிட்சமாக வளமா இருக்கனும் என்பதற்காக, பவித்ரா காளி மாதாவுக்கு அழைப்பு கொடுத்ததால் தான் நான் இங்கே வந்து இருக்கிறேன். எல்லோரையும் ஆசீர்வதிப்பதற்காகவும் வந்திருக்கிறேன். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது’ என்றார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளும் அமுலில் உள்ளது. எனவே வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.
இதேபோல் 19-ந்தேதி பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்லவும் அனுமதி இல்லை. மேலும் வருகிற 16-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதால் பக்தர்கள் அன்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. எனவே அந்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது திருவிழாவை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்கள் 4 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்கள் வருகிற 23-ந் தேதி வரை செயல்படும். ஈசானியம், செங்கம் ரோடு, காஞ்சி ரோடு, திருக்கோவிலூர் ரோடு ஆகியவற்றில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர் பக்தர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. சாதாரண நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது. மேலும் தொடர் மழையும் பக்தர்கள் வருகை குறையக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாம்...அரசு வேலை கிடைக்க இந்த பரிகாரம் பலன் தரும்