என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Security mystery dead"

    கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் உயிரிழந்த காவலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    கோயம்பேடு மாநகர பஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை 7மணி அளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இறந்த நபர் எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சீனு (41) என்பது தெரியவந்துள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×