search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விஜயலட்சுமி
    X
    விஜயலட்சுமி

    வந்தவாசி அருகே 102 வயது மூதாட்டி ஜீவசமாதி

    வந்தவாசி அருகே 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த 102 வயது மூதாட்டி ஜீவசமாதி அடைந்தார்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 102). இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர்.

    பொன்னுசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து செய்யாறு அடுத்த வேலியநல்லூர் கிராமத்திலுள்ள இளைய மகள் சுசிலா வீட்டில் கடந்த 43 ஆண்டுகளாக விஜயலட்சுமி வசித்து வந்தார்.

    கடந்த 7 ஆண்டுகளாக எறும்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு மகள் நாகரத்தினம் வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி ஜீவசமாதி அடைய முடிவெடுத்தார். அதன்படி கடந்த 11-ந்தேதி வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்திலுள்ள குந்தகுந்தர் விசாகா சார்யர் தவ நிலையத்திற்கு சென்ற அவர் எவ்வித உணவுகளையும் உட்கொள்ளாமல் தவம் மேற்கொண்டார். 5-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து தவத்தில் இருந்த அவர் ஜீவசமாதி அடைந்தார்.

    பின்னர் உறவினர்கள் அதே பகுதியில் மூதாட்டி உடலை அமர்ந்த நிலையில் வைத்து கொப்பரைத் தேங்காய், தேங்காய் மூடி சந்தனக்கட்டை, நெய் மூலமாக எரியூட்டினர்.



    Next Story
    ×