என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணைக்கு வரும் நீர்வரத்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாற்றில் அப்படியே திறந்துவிடப்படுகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வர தொடங்கியது. மேலும் அதிகரித்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 44 ஆயிரத்து 560 கனஅடி நீர் வரத்து தொடங்கி உள்ளது.
இந்த நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 கண்மாய்கள் வழியாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணையாறு படுகையில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் கரையின் இருபுறமும் தொட்டவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே தென்பெண்ணையாற்றின் படுகையில் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தென் பெண்ணையாற்றின் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
ராயண்டபுரம் கிராமத்தின் அருகே ஆற்றின் கரையோரப் பகுதியில் ஒதுங்கிய நிலையில் இருந்த பிணத்தை தண்டராம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாத்தனூர் அணை பகுதியில் நேற்று முன்தினம் 155.4 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மழை குறைந்து காணப்பட்டாலும் கிருஷ்ணகிரி அணை நிரம்பி அதன் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சாத்தனூர் அணைக்கு வரும் நீர் தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அணையின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் அணை மற்றும் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என்று தமிழக அரசு பிடிவாதமாக இருப்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடந்து வந்தாலும் பண்டிகைகள், பருவமழை என அடிக்கடி விடுமுறை விடப்பட்டதால் தேர்வுக்கான பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை.
எனவே மாணவர்களின் நலன் கருதி, நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையிலேயே நடத்த வேண்டும். ஆன்லைனில் தேர்வுகளை நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.
மகா தீபம் ஏற்றுவதற்காக 3 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீப நெய் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையாகும். இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும். கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலைக்கு வர முடியாதவர்கள் இந்த 11 நாட்களில் வந்து மகாதீபத்தை தரிசனம் செய்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் மற்றும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாத்தனூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 44,561 கனஅடி தண்ணீர் வருகிறது. புதிய ஷட்டர்கள் பொருத்துவற்காக, பழைய ஷட்டர்கள் அகற்றப்பட்டதால், தண்ணீர் முழுவதும் தென் பெண்ணையாற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது.
நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கக்கூடும் என்பதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் என 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பண்ணையாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள், பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஜவ்வாது மலையில் பெய்துள்ள மிதமான மழையால் குப்பநத்தம், செண்பகத்தோப்பு மற்றும் மிருகண்டா நதி அணை என 3 அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர், குப்பநத்தம் அணையிலிருந்து 2700 கன அடி, மிருகண்டா நதியிலிருந்து ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
3 அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாறு, கமண்டல நாக நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இருபுறங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் வருவாய்த்துறையினர் தங்க வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக, 800-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேறி, குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களை சூழ்ந்துள்ளன.
30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் மற்றும் தாழ்வானப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
ஏரிகள் மற்றும் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், பிரதான சாலைகளை ஆர்ப்பரித்து கடந்து செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில், சமுத்திரம் ஏரியில் இருந்து வெளியேறி ஓலையாற்றில் செல்லும் தண்ணீரானது ஏந்தல் கிராமத்தை சூழ்ந்துள்ளது.
மேலும் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால், கார்-வேன் உள்ளிட்ட வாகனங்கள், பைக் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நேற்று பிற்பகல் 2.51 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி செல்வார்கள். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மலை ஏறி இந்த மகாதீபத்தை தரிசனம் செய்யவும் தடை செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு 4 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் 2-வது அணுஉலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு மின்உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு நடந்து வந்த 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணி அளவில் தீப மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும்.மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது. விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கொரோனா பரவலையொட்டி கடந்த 1 ஆண்டாக பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மகா தீப விழாவையொட்டி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேர், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரம் பேர் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது தற்காலிகமாக டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
மாத சம்பளம் ரூ.70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா பணியில் ஒருவாரம் தொடர்ச்சியாக ஈடுபடும் டாக்டர்கள் தனியார் ஓட்டல்களில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசின் சார்பில் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்றவை வழங்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த 2 பெண் மருத்துவர்கள் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்களை உடன் பணிபுரிந்த டாக்டர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

அதில் ஒரு பெண் மருத்துவரை கற்பழிப்பு செய்ததாகவும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவத்துறை மூலமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண் மருத்துவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மருத்துவர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு அவர்கள் இருவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டாக்டர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து துறை ரீதியான டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பெண் மருத்துவர்களும் திருமணம் ஆகாதவர்கள். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...விவசாயிகள் பட்ட கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பது? -மல்லிகார்ஜூன கார்கே கேள்வி






