
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்து வரும் கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
வழக்கமாக மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமி அன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.03 மணிக்கு தொடங்கி நேற்று பிற்பகல் 2.51 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. மேலும் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி செல்வார்கள். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். மலை ஏறி இந்த மகாதீபத்தை தரிசனம் செய்யவும் தடை செய்யப்பட்டது.
இந்தநிலையில், ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.