என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வருகிற 26-ந் தேதி முதல் நடவடிக்கை
    • வேலூர் - திருவண்ணாமலை வழியாக இயக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கச்சிகுடா -நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.

    தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் இருந்து திருப்பதி, வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர் கோவிலுக்கு வரும் 26-ம் தேதி முதல் ஜுலை 2-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மார்க்கமும் 6 முறை இயக்கப் படவுள்ளது.

    கச்சிகுடா ெரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ெரயில் புறப்படவுள்ளது.

    குண்டூர் (அதிகாலை 12.45 ஓங்கோல் (அதிகாலை மணி), 3.18 மணி), நெல்லூர் (காலை 5 மணி), ரேணிகுண்டா(காலை 5.40 மணி), காட்பாடி (காலை 9.20 மணி, சென்றடையும். வேலூர் (காலை 9.43 மணி), திருவண்ணாமலை (காலை 10.43 மணி). விழுப்புரம் (பகல் 12.25 மணி), விருத்தாசலம் (பிற்பகல் 1.15 மணி), ஸ்ரீரங்கம் (பிற்பகல் 2.28 மணி), திருச்சி (பிற்பகல் 3 மணி), திண்டுக்கல் (மாலை 4.40 மணி), மதுரை (மாலை 6 மணி), விருதுநகர் (மாலை 6.45 மணி), சாத்தூர் (இரவு 7.13 மணி), கோவில்பட்டி (இரவு 7.35 மணி), திருநெல்வேலி(இரவு 9.05 மணி) வழியாக நாகர்கோவில் ெரயில் நிலையத்தை சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

    இதேபோல், நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ெரயில் புறப் படவுள்ளது.

    திருநெல்வேலி (அதிகாலை 2 மணி), கோவில் பட்டி (அதிகாலை 2.53 மணி), சாத்தூர்(அதிகாலை 3.13 மணி). விருதுநகர் (அதிகாலை 3.38 மணி), மதுரை (அதிகாலை 4.15 மணி), திண்டுக்கல் (காலை 5.25 மணி), திருச்சி (காலை 7.40 மணி), ஸ்ரீரங்கம் (காலை 8.23 மணி). விருத்தாசலம் (காலை 9.48 மணி).

    விழுப்புரம் (காலை 10.25 மணி). திருவண்ணா மலை (காலை 11.38 மணி), வேலூர் (பிற்பகல் 1.20 மணி), காட்பாடி (பிற்பகல் 1.35 மணி), ரேணிகுண்டா (மாலை 4.25 மணி), நெல்லூர் (மாலை 6.40 மணி), ஓங்கோல் (இரவு 8.10 மணி), குண்டூர் (இரவு 10.43 மணி) வழியாக கச்சிகுடா ெரயில் நிலையத்தை திங்கள் கிழமை காலை 6.30 மணிக்கு கச்சிகுடா - நாகர்கோவில் இடையே 25 ெரயில் நிலையங் களில் வாராந்திர சிறப்பு ெரயில் நிறுத்தப்படும்.

    கச்சிகுடா (ெரயில் எண் - 07435) ெரயில் நிலையத்தில் இருந்து வரும் 26-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையும், நாகர்கோவில் (ெரயில் எண் 07436) ெரயில் நிலையத்தில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை சிறப்பு ெரயில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

    • ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர்
    • பொன்னூர் காப்பு காட்டில் விடப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 6 அடி நீல சாரை பம்பு பிடிபட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மக்களை அச்சுறுத்தி வந்த 6 அடி நீளம் சாரை பாம்பு பிடிபட்டது.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெரேசாபெரியநாயகம். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவரது வீட்டில் 6 நீள சாரை பாம்பு புகுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வந்தவாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீல சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து பொன்னூர் காப்பு காட்டில் விட்டனர்.

    • இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்வதாக புகார்
    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தில் இலக்கு மக்கள் பட்டியலில் முறைகேடாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதாக புகார் தெரிவித்து அந்த கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மகளிர் மேம்பாட்டு உள்ளிட்டவைக்காக வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாங்குத்து ஊராட்சியில் இலக்கு மக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த பட்டியலில் பயனாளிகளை ஊராட்சி நிர்வாகம் முறைகேடாக தேர்வு செய்வதாக புகார் தெரிவித்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த திங்கள்கிழமையே இதுகுறித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாலையில் தீமிதி விழா நடைபெற்றது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்நகர் கிராமத்தில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் கடந்த மாதம் 30-ம்தேதி அலகு நிறுத்தி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் பிற்பகல் 2 மணி அளவில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. கடந்த 6ம்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்கள் நடைபெற்று வந்தது.

    பின்னர் கடந்த 17-ந் தேதி காலை கோயில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்ட துரியோதனன் சிலை முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    மாலையில் தீமிதி விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் வருகைதந்து தந்து அம்மனை தரிசனம் செய்தார்.கோயில் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராணிதண்டபாணி சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நேற்று தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கொருக்கை பகுதியில் அர்ஜுனன் காலனி உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் கடந்த 5 வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    இதே போல புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் முறையாக வருவதில்லை.

    இதுகுறித்து பலமுறை தலைவரிடமும், அதிகாரிகளும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கொருக்கை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து செய்யாறு போலீசார் மற்றும் கொருக்கை தலைவர் அருள் நரசிம்மன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆரணி அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த தீர்த்தம்மாள், லாடவாரம் பகுதியை சேர்ந்த ஆந்தாயி மட்டதாரி கிராமத்தை சேர்ந்த சுசிந்திரன் ஆகிய 3 பேர் அரசு மதுபாட்டிகள் பதுக்கி வைத்து விற்று கெண்டிருந்தனர். அவர்கள் போலீசார் பிடித்து சுமார் 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் 3 பேர் மீது வழக்கு பதிந்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • 6 வாகனங்கள் அனுமதி ரத்து
    • முதலுதவி, தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி இருந்ததால் நடவடிக்கை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் கூட்ரோடு அருகில் ஆரணி மோட்டார் வாகன அலுவலகம் இயங்கி வருகினறது.

    ஆரணி போளுர் செய்யார் சேத்பட் உள்ளிட்ட பகுதிகளில் 45 தனியார் பள்ளி உள்ளன. இந்த பள்ளி பஸ்களை மோட்டார் வாகன அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேன் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இதில் 353 வாகனங்களில் முதல்கட்ட மாக 230 தனியார் பள்ளி வாகனங்களில் 22 வாகனங்கள் ஆய்வு செய்தனர். முதலுதவி தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி உள்ள 6 வாகனங்கள் அனுமதி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மற்ற வாகனங்களை தொடர்ந்து மோட்டார் வாகன அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். தாசில்தார் மஞ்சுளா, ஆரஞ்ச் பள்ளி சேர்மன் சிவக்குமார், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • விண்ணப்பங்களை மாணவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

    செய்யாறு:

    செய்யாறு சட்டமன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் வகையில் புதியதாக இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு இ-சேவை மையத்தை பொது மக்களின் பயன்பா ட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    மேலும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இந்த மையத்தில் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்தி, சௌந்தர பாண்டியன் மற்றும் கோபு, ஆறுமுகம், ராம் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (70). இவர் தனது 7 வயது பேரனுடன் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் குடிசை வீட்டு கதவைத் தாழிட்டு மர்ம கும்பல் தீவைத்ததாக கூறப்படுகிறது.

    குடிசை வீடு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தமிழ்செல்வி அவரது பேரனையும் பாதுகாப்பாக மீட்டனர்.

    ஆனால் குடிசை வீடு மற்றும் அதிலுள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை
    • இன்று பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் விபரீதம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, பெரணமல் லூர் பூத்தான் குட்டை தெருவை சேர்ந்தவர் 'பிரவீன் குமார்(வயது 35). செய்யாறில் உள்ள தனி யார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி புவனேஸ் வரி(30). இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணமானது முதல் புவனேஸ்வரிக்கும் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த 1-ந் தேதி செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் விரிவு பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் கண வன், மனைவி இருவரும் வசித்து வந்தனர்.

    புவனேஸ்வரிக்கு இன்று (வியாழக்கிழமை) பிறந்த நாள் வருவதால், இதனை கொண்டாடு வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கணவன் -மனைவி இருவரும் பேசியுள்ளனர்.

    அப்போது, அவர் களுக்குள் பிறந்தநாள் கொண்டாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் புவனேஸ்வரி வீட்டின் அறையில் தனியாக தூங்கச் சென்றார். பிரவீன்குமார் மற்றொரு அறையில் படுத்து தூங்கினார். மனைவியை எழுப்புவதற்காக பிரவீன் குமார் நேற்று காலை 6 மணி அளவில் அறைக்கு சென்றார்.

    தூக்கிட்டு சாவு

    அப்போது புவனேஸ் வரி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதனால் பிரவீன் குமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து செய் யாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புவனேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த புவ னேஸ்வரியின் தாயார் விஜயா அளித்த புகா ரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஸ்வ ரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சப்-கலெக்டர் அனா மிகா விசாரணை நடத்தி வருகிறார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் கூடுவதால் டீ விற்பனை களைகட்டியது
    • யானையை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 2 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    உடன் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கடிஜாலா, வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, வனத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    யானைகளை வனப்பகு திக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு குழுவினர் யானை பின் பக்கமாக எந்த பக்கம் நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு குழுவினர் யானை முன் பக்கமாக இருந்து எந்த பகுதிக்கு நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும் பொது மக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் தான் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஏலகிரி மலை மலையடிவாரத்தில் நோக்கி வந்தது.

    ஜலகாம்பாறை, ஜடையனூர் மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு சென்று விடும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலை வெங்காயப்பள்ளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் கருப்பனூர் அன்னான்டபட்டி பகுதி வழியாக லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து விட்டு முகாமிட்டுள்ளது.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து யானை இன்று திருப்பத்தூர் நோக்கி சென்றது.

    அப்போது பொது மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். அங்கு டீ வியாபாரம் களை கட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக யானை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். யானை காட்டு பகுதிக்கு சென்றால் தான் பொது மக்கள் நிம்மதி கிடைக்கும்.

    யானை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

    ×