என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • தேவா கிணற்றில் மூழ்கினார் நீண்ட நேரம் ஆகியும் தேவா மேலே வராததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம்:

    காஞ்சிபுரம் பல்லவர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். நெசவுத் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தேவா (வயது 26).

    இவர் பேன்சி கடையில் வேலை செய்து வந்தார். தேவா நண்பர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூருக்கு சென்றார். அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் தேவா குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது தேவா கிணற்றில் மூழ்கினார் நீண்ட நேரம் ஆகியும் தேவா மேலே வராததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் தேவாவை கிணற்றில் நண்பர்கள் தேடினர். அவர் கிடைக்காததால் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து தேவாவை தேடினர். சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு தேவாவை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • அண்ணாமலை மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த தெற்கு ரெயில்வே ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு தெற்கு ரெயில் நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரெயில் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

    தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு சென்றடையும். தொடர்ந்து அங்கிருந்து வழக்கம் போல் மயிலாடுதுறை செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் ஜூலை மாதத்தில் 2 மற்றும் 3-ந் தேதிகள், 30 மற்றும் 31-ந் தேதிகள், ஆகஸ்டு மாதத்தில் 30 மற்றும் 31-ந் தேதிகள், செப்டம்பர் மாதத்தில் 28 மற்றும் 29-ந் தேதிகள், அக்டோபர் மாதத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகள், நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகள், டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26-ந் தேதிகள் ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்

    ஆரணி:

    ஆரணி அடுத்த நேசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (வயது 30) மாட்டுவண்டியில் மணலை அள்ளிக்கொண்டு எஸ்.வி நகரம் அருகே வந்தபோது. ஆரணி தாலுகா போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன்அஜித் மாட்டுவண்டியை விட்டுவிட்டு தப்பிஓடினார்.

    இதேபோன்று மேலசீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் பூபதி ஆகிய இருவரும் 2 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தனர். அவர்களும் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் 3 வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசாைரக் கண்டவுடன் தப்பி ஓடினர். தப்பி ஓடிய 3 பேரையும் ஆரணி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

    • தொடர்ந்து மன வேதனையில் இருந்துள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பொன்னுரங்கம் (வயது 60) இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. குடிக்கும் பழக்கமுடைய இவர் தொடர்ந்து மன வேதனையில் இருந்துள்ளார்.

    நேற்று இரவு வீட்டில் பின்பக்கமாக சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர்.

    ஆரணி டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யாகபூஜைகளும் நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கேளூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி காலை கோபூஜை, கணபதி ஹோமத்துடன் மாலை முதல் கால யாகபூஜைகளும் நடைபெற்றது.

    5-ந் தேதி திங்கட்கிழமை காலை 2-ம் கால யாகபூஜைகளுடன் அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 60 லிட்டர் பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று கண்ணமங்கலம் அடுத்த ஏ.கே.படவேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (48), சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அவர் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், படவேடு கிராமத்தில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தயாளன் (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (60), ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் நேற்று தனது பைக்கில் கேளூர் சந்தைமேட்டிற்கு வந்தார்.

    சமத்துவபுரம் நுழைவாயில் அருகே சென்றபோது, திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சந்தவாசல் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • யாக பூஜைகள் நடத்தப்பட்டது
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

    இதனையொட்டி நேற்று யாக பூஜைகள் நடத்தப்பட்டு, 10 மணி அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதில் போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

    • தர்ணாவில் ஈடுபட்டனர்
    • விவசாய குறைதீர்வு கூட்டம் நடந்தது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற விவசாய குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாயிகள் வந்தவாசி நகர்ப்புற பகுதியியான கோட்டை மூலையில் நிழற்குடை அமைப்பதற்காக பல கூட்டங்களில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை எனக்கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரி சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் விவசாயிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நியர்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ெதாடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நல மையத்தை தமிழக முதல்-அமைச்சர் வீடியோ காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் ஆகியோர் சுகாதாரமைய கட்டடத்தை தொடங்கி ைவத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், கண்ணமங்கலம் டவுன் செயலாளர் கோவர்த்தனன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித். நகரப் பொருளாளர் அக்பர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், மருத்துவர் ஹேம்நாத், நகர மன்ற உறுப்பினர்கள் விநாயகம், இஸ்ரத்ஜபின் அப்சல், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செந்தில்வேல், நகர ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 மட்டுமே செயல்படுகிறது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் வேளாண் விரிவாக்க மையத்தில் உதவி திட்ட அலுவலர் திருமால் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது திடீரென விவசாயிகள் ஏர்கலப்பை போன்று செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குறிப்பாக கலசபாக்கம் பகுதியில் தான் அதிக அளவு விளைச்சல் உள்ளது. ஆனால் இங்கு 2 நெல் கொள்முதல் மையங்கள் தான் செயல்படுகிறது. 8 கொள்முதல் மையங்கள் செயல்பட வேண்டிய இடத்தில் 2 செயல்பட்டால் விவசாயிகள் எப்படி முழுமையாக பயன்பெறுவார்கள்.

    இதனால் கலசப்பாக்கம் பகுதியில் அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உதவி திட்ட அலுவலர் திருமால் உங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக தான் இந்த கூட்டமே நடக்கிறது. உங்கள் கோரிக்கைகள் மீது உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று கூறினார்.

    பின்னர் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் வேளாண் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குறைவு தீர்வு கூட்டத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், பிடிஓ முருகன் உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மரம் சாய்ந்து சாலை துண்டிப்பு
    • சமையல் செய்யும் போது தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து நாசம்

    ஆரணி:

    ஆரணி டவுன் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்ளான சேவூர் எஸ்.வி.நகரம் முள்ளிபட்டு, இரும்பேடு உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தன.

    மேலும் ஆரணி டவுன் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளன ஆரணி டவுன் சைதாப்பேட்டை கங்கையம்மன் கோவில் அருகே மரம் வேறோடு சாய்ந்ததால் அந்த பகுதியில் சாலை துண்டிக்கபட்டன.

    அதே போல ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி சம்பத் கோமதி தம்பதியனரின் கூரை வீடு சமையல் செய்யும் போது விறகு அடுப்பு தீ பரவி கூரை வீடு முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.

    ×