என் மலர்
திருவண்ணாமலை
- சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது
செங்கம்:
செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விளம்பர பேனர்கள் மீது தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி மெயின் ரோடு, போளூர் ரோடு, மில்லத் நகர், மேலப்பாளையம், தாலுகா ஆபிஸ், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வணிக மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் விளம்பர பேனர்கள் வைக்கப்ப ட்டுள்ளது.
இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் ஏற்படும் சூழலும். தமிழக அரசு விளம்பர பேனர்களுக்கு தடை விதித்துள்ளது.
பேனர்கள் வைத்து சில நாட்காளக பேனர்களை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும். விளம்பர பேனர்களை கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே செங்கம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பூங்கரக ஊர்வலம் நடந்தது
- பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டி, பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது.
காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோவிலில் கொப்பரையில் கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இரவில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை புதுப்பேட்டை பகுதி மக்கள் சார்பில் கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- 12.60 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
செய்யாறு:
செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மலைவையாவூர்- திருப்பதி தாங்கள் இடையே ரூ.1 கோடியே 11 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்படுகிறது.
புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் வழக்கறிஞர் புரிசை எஸ்.சிவகுமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ. ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சின்ன செங்காடு மற்றும் செங்காடு ஆகிய கிராமங்களில் 12.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், திராவிட முருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4 பேர் கைது
- செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவன்(வயது 30). இவர் அந்த கிராமத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 4-ந் தேதி நள்ளிரவு சேத்துப்பட்டில் திருமண வீட்டாரிடம் பூமாலைகளை கொடுத்து விட்டு இருச்சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலை, சின்ன கோழிப்பு லியூர் கூட்டுச் சாலை அருகே வரும்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் தேவனை வழிமடக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒரு செல்போன், பணம் மற்றும் இருச்சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தேவன் அளித்த புகாரின்பேரில் தேசூர் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேத்துப்பட்டு அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23), சுனில்(23), சஞ்சய்(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தேவனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன், பணம், இருச்சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- 900 வருடம் பழமையானது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த திருமால் பாடி கிராமத்தில் கி.பி.1136ல் பராந்தக சோழன் மகன் விக்கிரம சோழனால் கட்டப்பட்ட ஸ்ரீ அரங்கநாதர் கோவில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிதிலமடைந்த நிலையில் இருந்தது.
அந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல முறை அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித பணிகள் நடைபெற வில்லை.
திருமால் பாடி கிராம பக்தர்கள் மீண்டும் கடந்த 2020-21-ம் ஆண்டு சட்டமன்ற பேரவை அறிவிப்பு மூலம் திருப்பணி செய்திட ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை எந்த வித நிதியும் வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்கள்.
மேலும் 900 வருடம் பழமையான கோவில் என்பதால் கோவில் புனரமைப்பு பணி செய்யப்படாமல் கோவில் கூரை மழையால் ஒழுகும் அவலம் உள்ளது.
மேலும் பல இடங்களில் பழைய கற்கட்டிடம் பாரம் தாங்காமல் விரிசல் விட்டு ஆங்காங்கே இரும்பு பைப் கொண்டு முட்டுகளும், சிமெண்ட் செங்கல்கள் கொண்டு தூண்களும் அமைக்கப்பட்டு மேல்கூரை தாங்கி பிடிக்க பட்டுள்ளது.
கோவில் பக்கவாட்டில் கோவில் கூரை பாரம் தாங்காமல் சிறிது இறக்கமாக காணப்படுகிறது.
உடனடியாக தற்போது அரசு நடவடிக்கை எடுத்து பழங்கால கோவிலை காக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
- வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை பார்வையிட்டார்
- அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கு ஆரணி வட்டாரக்கல்வி அலுவலர் அருணகிரி திடீர் ஆய்வு செய்தார்.
பள்ளி வளாகம், வகுப்பறை வண்ணம் தீட்டுதல் பள்ளியின் நுழைவு வாயில் போன்ற பணிகளை பார்வையிட்டார்.
இதில் பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 9 கிராமங்களை நகராட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
வந்தவாசி அடுத்த சென்னாவரம் மும்முனி, பாதிரி, வெண்குன்றம், மாம்பட்டு, பிருதூர், கீழ்சாத்தமங்கலம், அம்மையப்பட்டு, செம்பூர் ஆகிய கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வந்தவாசி நகராட்சியில் 9 கிராமங்களை சேர்த்தால் கிராம பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
9 கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் சேர்க்கக்கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தனர்
- கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஆரணி:
போளூர் அடுத்த துரிஞ்சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமாக ஆத்துவாம்பாடி பெரிய ஏரி பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஏழுமலை நிலத்திற்கு சென்றார். அப்போது வாலிபர்கள் 3 பேர் நிலத்திலிருந்து இரும்பு குழாய்களை அறுத்து திருடி கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட ஏழுமலை அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வாலிபர்கள் ஏழுமலையை கண்டவுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வாலிபர்க ளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்பழகன் (வயது 28), சசிதரன், சதீஷ் (30) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கல்யாண உற்சவம் வெகு விமர்சையக நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மதுபாட்டில்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் கண்ணமங்கலம் அடுத்த மேல்நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி செந்தாமரை (வயது 48) என்பவர், அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோ ல், கீழ் நகர் கிராமத்தில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அருள் (57) என்பவ ரையும் போலீசார் கைது செய்தனர்.
அவரிட மிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.
- திருமணமான ஒரு ஆண்டில் நேர்ந்த சோகம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகே உடையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 28). கட்டிட தொழிலாளி.
இவருக்கும் பவானி (19) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.
இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள தனது பாட்டி ஊரான அருவங்காடு கிராமத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
வாரத்திற்கு ஒருமுறை மனைவியை பார்ப்பதற்கு உடையார்குப்பம் வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வருவதாக கூறி இருந்த சந்திரசேகர் வரவில்லை.
அவர் புதூர்செக்கடி கிராமத்தில் வீராத்தா கோவில் அருகில் உள்ள ஒரு பாலத்தில் சந்திரசேகர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பவானி தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டார்
- பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் வெட்டினார்
செய்யாறு:
செய்யாறு அடுத்த நர்மா பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். எலக்ட்ரீசியன். இவரது மனைவி ரேவதி.
இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ரேவதி செய்யாறு சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு செல்வதால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு பன்னீர்செல்வம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் ரேவதியிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் அருகில் இருந்த கத்தியை எடுத்து ரேவதியின் தலையால் வெட்டினார். இதில் ரேவதி பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் படுகாயம் அடைந்த ரேவதியை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து ரேவதி அனக்காவூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.
பணம் தர மறுத்த மனைவியை கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.






