என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.
    • விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் விஜய் (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.

    இதனால் விஜய் மன உளைச்சலில் காணப்பட்டார். நேற்று இரவு வீட்டின் அறையில் திடீரென விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு கொண்டதும், மகன் இறந்தது தெரியாமல் தாயார் தூக்கு போட்டுக்கொண்டதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.

    வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.

    மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.

    பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

    மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.

    கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    முன்னாள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் சாவல்பூண்டி சுந்தரேசன் இருந்து வந்தார். இவர் திருவண்ணாமலை வேட்டவலம் சாலை குன்றக்குடி அடிகளார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

    சுந்தரேசன் தனது மற்றொரு வீடான அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

    குன்றக்குடி அடிகளார் நகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று மாலை வீட்டின் எதிரே அவரது கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனுக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சுந்தரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வெள்ளை சட்டை மற்றும் பேண்ட் அணிந்த நபர் ஒருவர் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எதற்காக தீ வைத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்ப் மோட்டார் பழுதானதால் விபரீதம்
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்

    செய்யாறு:

    திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து சிலர் வேனில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.

    பஸ் நிலையம் பின்புறம் பங்களா தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இறக்கினர். அப்போது வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர் ஓய்வு எடுத்து கொண்டி ருந்தார். திடீரென செல்ப் மோட்டார் எரிந்து கியரில் இருந்து வேன் தானாக ஓடியது. உடனே சுதா ரித்து கொண்ட டிரைவர் வேனில் இருந்து கீழே இறங்க முயன்றார்.

    அதற்குள் அருகே இருந்த சாலையோர தடுப்பு மீது வேன் மோதி நின்றது. பின்னர், வேன் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதற்கிடையில், வேன் தானாக ஓடியதால் அங்கி ருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின் னர், மண்ணை வாரிதூவி என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    மேலும், செய்யாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சம்பவ இடத்திற்கு வருவ தற்குள் அங்கிருந்த மக்கள் நீரை ஊற்றி வேன் என்ஜினில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து, வேனில் பழுது ஏற்பட்ட செல்ப் மோட்டார் மாற்றப்பட்டு தயார் நிலைக்கு வந்தது. மேலும், வேனில் யாரும் இல்லாதபோது இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. இச்சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள் பஜனை பாடி வந்தனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள ருக்குமணி சத்திய பாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவிலில் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று மண்டல அபிஷேகம் விழா காலை 9மணிக்கு நடைபெற்றது.

    மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண கோலத்துடன் சுவாமி வீதி உலா வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஊர்வலத்தில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடம் அணிந்து பக்தர்கள்பஜனை பாடி வந்தனர்.

    இரவு சுபத்திரை திருமணம் நாடகமும் நடைபெற்றது.

    விழாவில் வடதண்டலம் சுற்றியுள்ள கிராம மக்கள் பலரும் விழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    • பாதசாரிகளையும் அச்சுறுத்தி வருவதாக புகார்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கம் நகரில் உள்ள 18 வார்டுகளிலும் குறிப்பாக புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மெயின், மில்லத் நகர், போளூர் சாலை, தளவாநாயக்கன்பேட்டை, மேலப்பாளையம், ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு உள்பட போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகிறது.

    மேலும் கூட்டமாக மாடுகள் சாலையில் வழிமறித்து நிற்பதால் பல்வேறு நேரங்களில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர்.

    இது குறித்து பலமுறை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி தெரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாத்து வளர்க்காமல் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் விட்டு செல்வதாகவும் இதனால் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என சாலைகளில் செல்லும் பாதசாரிகளையும் கால்நடைகள் அச்சுறுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் உட்பட கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாள ர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பிரசார நோட்டீஸ் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது
    • காவல் துறை, வருவாய் துறை இணைந்து நடத்தியது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிபாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் கலால், வருவாய் மற்றும் காவல் துறை இணைந்து கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

    இதில் ஆரணி தாசில்தார் மஞ்சுளா, கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கோட்ட கலால் அலுவலர் தமிழ் மணி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    மேலும் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.கள்ளத்தனமாக சாராயம் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வாட்ஸ் அப் எண்ணுடன் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டது.

    • மரத்தில் பிணமாக தொங்கினார்
    • சாவில் சந்தேகம் இருப்பதாக மகள் புகார்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த வில்வபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 80). இவரது மகள் கோகிலா (50). மகன் நாராயணமூர்த்தி (45). கோகிலா திருமணமாகி ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார்.

    நாராயணமூர்த்தி தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலகிருஷ்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு கோகிலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கோகிலா போலீஸ் நிலையத்தில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    ஜமுனா முத்தூர் அடுத்த போங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 44). இவர் போளூருக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தார். பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக மினி வேன் ஒன்று வந்தது. அந்த வேன் போங்கனூர் கிராமத்திற்கு செல்வதால் வள்ளியம்மாள் அதில் ஏறினார். வேனில் வள்ளியம்மாள் உட்பட 10 பேர் பயணம் செய்தனர்.

    வேனை அதே உரைச் சேர்ந்த குப்பன் (25) என்பவர் ஓட்டி சென்றார். மினி வேன் அத்திமூர் துணை மின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வள்ளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்
    • தனியார் மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்

    வெம்பாக்கம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குவாரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 9-ம் தேதி செய்யாறு அடுத்த சிப்காட் தொழிற்சாலையில் லாரியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து வந்தார்.

    சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்.

    பின்னர் லாரியில் படுத்திருந்தார். மறுநாள் காலை 10-ந் தேதி காலை அவர் மயங்கி கிடந்தார். அவரை சக ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். பின்னர் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகத்தடையில் பைக் ஏறி இறங்கிய போது விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 69). இவரது மனைவி நீலாவதி (49).

    இவர்கள் குடியாத்தத்தில் இருந்து ஆரணி நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.

    கொங்கராம்பட்டு கிராம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த நீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாவதி உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் முருகேஷ் தகவல்
    • 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட காலி பணி இடங்களுக்கு தகுதியான நபர்களை வரும் 16-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 2.மணி வரை தேர்வு நடைபெற உள்ளன.

    இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ.. பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் போது 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatcjobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த முகாமில் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை எவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    ×