என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 20). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை முருகன் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார்.

    செய்யாறு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் பிஎஸ்சி முடித்துள்ளார். இவர் கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடினர்.

    அவர் கிடைக்காததால் அனகாவூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

    செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவன். அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடி உள்ளனர். இவர் கிடைக்காததால் இது குறித்து பெற்றோர் செய்யாறு போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த 3 சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • 8 பேர் மீது வழக்கு பதிவு

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த குடையம்பாக்கத்தை சேர்ந்தவர் உமாபதி (வயது 27), இவரது தம்பி பொன்னம்பலம் (21). இவர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள். அண்ணன், தம்பி இருவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகின்றனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் நீலவண்ணன். இவரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் எருது விடும் விழாவில் உமாபதி காளை வெற்றி பெற்றது.

    இதனால் நீலவண்ண னுக்கும், உமாபதிக்கும் இடையே காளை வெற்றி பெற்றது சம்பந்தமாகவும், தொழில்போட்டி காரணமாகவும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று உமாபதி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த நீலவண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வயலூர் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, தென்கழனி சேர்ந்த சரவணன், வெங்க டேசன், சந்தோஷ் ஆகியோர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆத்திரமடைந்த அவர்கள் உமாபதியை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டினர்.

    இது குறித்து உமாபதி மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தி, சரவணன், வெங்கடேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உமாபதியின் தம்பி பொன்னம்பலம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீல வண்ணன் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே கயிற்றில் தொங்கிய பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 70). இவரது மனைவி கஸ்தூரி (65) இவர்கள் உப்பு மற்றும் கோலமாவு வியாபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 6 மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

    மேலும் அதே கிராமத்தில் வசித்து வந்த மகன் மற்றும் மருமகள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தேவையானதை வாங்கிக் கொடுத்து பார்த்து வந்துள்ளனர்.

    இருப்பினும் கடந்த 3 நாட்களாக கதவை சாத்திக்கொண்டு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் அவரது மருமகள் பூங்காவனம் வீட் டிற்கு சென்று உள்ளார்.

    அப்போது ஒரே கயிற்றில் கதிர்வேலுவும் அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கில் தொங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூங்காவனம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இறந்த நிலையில் கிடந்த இருவரையும் கீழே இறக்கினர்.

    இச் சம்பவம் குறித்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கயிற்றில் கணவன் மனைவி தூக்கு போட்டு இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கணவன்- மனைவி தலைமறைவு
    • மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்

    கண்ணமங்கலம்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரின் மனைவியிடம், நேற்று மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்தார்.

    மேலும் கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராணுவ வீரர் வீடியோ

    இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி சைலேந்தி ரபாபுவை வலியுறுத்தினார். இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட வீசாரணையில் தெரிந்தது.

    இதனை அடுத்து சந்தவாசல் காவல்நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார்.

    அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரித்தார். இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பிலும் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்களை நியமித்துள்ளோம். பாதிக்க பட்ட பெண்ணுக்கு அனைத்து துறை அரசு மருத்துவர்களும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை முறையாக விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். தற்போதைக்கு மருத்துவமனையில் மட்டும் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால் அவர்கள் வீட்டிற்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-

    'ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதில் 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

    இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள்' என்றும் ராணுவ வீரர் பிரபாகரன் வினோத்திடம் தொலை பேசியில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பி உள்ளது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதில் கடந்த சில நாட்களாக கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் நேற்று அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது உடன் இரண்டு பெண் போலீசார் பாதுகாப்புக்காக பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் வேலூர் நோக்கி தப்பி சென்று விட்டனர். இது குறித்து பெண் போலீசார் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் தலைமுறைவான ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி கீர்த்தியை தேடி வருகின்றனர்.

    விசாரணைக்கு பயந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவியது போல் தம்பதி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் போக்சோவில் கைது
    • திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவுன் குமார் (வயது 30).

    இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியபோது அதை ஏற்க மறுத்தார்.

    பின்னர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தகவலை அறிந்த சிறுமி தன் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    சிறுமியின் தாயார் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் போக்சோ சட்டத் தின் கீழ்வழக்குப்பதிவு செய்து பவன் குமாரை கைது செய்தனர்.

    மேலும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து
    • நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த புதுப்பா ளையம் கூட்ரோட்டில் டாக்டர் அஞ்சானாத்திரி (வயது 30) என்பவர் கிளினிக் நடத்தி வருகிறார். பெண் டாக்டரை தாக்கிய கும்பல் இவரது கிளினிக்கிற்கு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அப்போது அஞ்சா னாத்திரியிடம் கிளினிக்கை காலி செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    டாக்டர் முடியாது எநோயாளிகள் அலறியடித்து ஓட்டம் ன்று கூறியதால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கிளினிக்கிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து காயமடைந்த அஞ்சானாத்திரி தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டாக்டரை தாக்கிய சம்பவத்தில் முருகன் (வயது 57). தொழிலாளி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலை மறை வானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் புகுந்து பெண் டாக்டரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இன்று ரத உற்சவம் நடக்கிறது
    • மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் ஊராட்சியில் கிராம தேவதை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று 13-ந் தேதி காலை தொடங்கியது.

    முன்னதாக கடந்த 30-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காப்பு கட்டி தினமும் பாலாபிஷேகம் நடைபெற்றது. 6-ந் தேதி அப்பனூர் மாரியம்மனுக்கு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ரத உற்சவம் தொடங்கியது. இன்று அப்பனூர் மாரியம்மனுக்கு ரத உற்சவம் நடக்கிறது.

    இரவு 10 மணி அளவில் நாடகமும், வாணவேடிக்கையும், மாலை ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.

    • மும்பையை சேர்ந்தவர்
    • முதலுதவி சிகிச்சை அளித்தார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் மும்பை ரயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் பெண் ஒருவர் தனது சகோதரி களுடன் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் வந்து கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த சக பயணிகள் மற்றும் சகோதரிகள் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மணி மற்றும் வின்சென்ட் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    மயங்கி விழுந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தியும், உறவினரை வாயில் ஊத சொல்லியும் முதலுதவி செய்தனர். அவரை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அரக் கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரித்த போது, மயங்கி விழுந்த பெண் மும்பையை சேர்ந்த மாலா (45) என்பது தெரியவந்தது.

    இவர் 2 சகோதரிகளுடன் அரக்கோணத்தில் இருக்கும் தனது அண்ணன் கோபால் என்பவரது வீட்டுக்கு வந்ததாகவும், மீண்டும் மும்பை செல்வதற்காக சகோதரரிகளுடன் ரெயில் நிலையம் வந்த போது இச்சம்பவம் நடந்தது என்றும் தெரியவந்தது.

    • மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    தூசி அடுத்த கூழமந்தலை சேர்ந்தவர் மரிய அமல ராஜன் (வயது 46). இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன், தூசி போலீஸ் நிலையத்தில் மருத்துவம் படிக்காமலேயே மரிய அமல ராஜன் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மரிய அமல ராஜன் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் கிளினிக்கில் உள்ள மருத்துவ கருவிகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மரிய அமலராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
    • அதிகாரிகள் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காய்கறி மார்க்கெட், காந்தி ரோடு, மண்டி தெரு, பழைய புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி பாத்திர கடை மளிகை கடை நோட்டு புத்தக கடை உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் குபேரன் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வியாபாரிகளிடம் வழங்கினர்.

    இதில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு சீனிவாசன் பரமசிவம், துணை தாசில்தார் அய்யப்பன் ஆர்.ஐ. நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • வாலிபரை மடக்கி பிடித்தனர்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    ஆந்திர மாநிலம் சித்தூரில் நேற்று பகல் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் போலீஸ் ஜீப்பை திருடிக் கொண்டு தமிழ்நாடு வேலூர் மாவட்டம் வழியாக சென்றுவிட்டார்.

    பின்னர் ஜீப் திருவண்ணாமலை மாவட்டம் வழியாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது. இது குறித்து ஆந்திரா போலீசார் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை சாவடிகளிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு ஜீப்பை தேடினர். இந்த நிலையில் நேற்று மாலை வந்தவாசி பஜார் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சித்தூர் போலீசாருக்கு சொந்தமான ஜீப்பை வாலிபர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்தார்.

    பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் ஜீப் வேகமாக செல்ல முடியாமல் நின்றது.

    இதனை பின்தொடர்ந்து வந்தவாசி டி.எஸ்.பி. கார்த்திக் சினிமா பாணியில் வேகமாக ஓடி வந்து ஆந்திர போலீஸ் ஜீப்பை கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த வாலிபரிடம் இருந்து ஜீப் பறிமுதல் செய்யப்பட்டு அவரை வந்தவாசி தெற்கு போலீசில் ஒப்படைத்தார்.

    அந்த வாலிபரிடம் டிஎஸ்பி கார்த்திக் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் ஜீப்பை கடத்தியவர் சித்தூர் பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 24) என தெரிய வந்தது. தொடர்ந்து வாலிபரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

    இதையடுத்து வந்தவாசி போலீசார் சித்தூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சித்தூர் போலீசாரிடம் ஜீப்பையும், சூர்யாவையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார்.
    • ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

    மேலும் கடை சம்பந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார்.

    அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

    இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார். அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தார் .

    இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட நிலையில் மகளிர் ஆணையம் விசாரணை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×