திருமண ஆசை காட்டி சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்

வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் போக்சோவில் கைது திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
திருமண ஆசை காட்டி சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்
Published on

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பவுன் குமார் (வயது 30).

இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார். அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியபோது அதை ஏற்க மறுத்தார்.

பின்னர் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தகவலை அறிந்த சிறுமி தன் தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் போக்சோ சட்டத் தின் கீழ்வழக்குப்பதிவு செய்து பவன் குமாரை கைது செய்தனர்.

மேலும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com