search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "solider"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார்.
    • ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

    மேலும் கடை சம்பந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார்.

    அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவை வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

    இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார். அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரித்தார் .

    இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர் வீடியோ வெளியிட்ட நிலையில் மகளிர் ஆணையம் விசாரணை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் சிலிமி‌ஷம் செய்த ராணுவவீரர் கைது செய்யபட்டு ஜெயிலில் அடைக்கபட்டார்.
    வேலூர்:

    மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் எஸ்14 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம்பெண் பயணம் செய்தார்.

    ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த சென்னை பெண்ணிடம் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    இதனால் திடுக்கிட்ட இளம்பெண் அலறி கூச்சலிட்டார். உடனே உஷாரான பயணிகள் வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த துஷ்யந்த் (வயது 24) என்பதும், ராணுவ வீரரான இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்கு செல்வதும் தெரியவந்தது. போலீசார் துஷ்யந்த்தை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
    ×