என் மலர்
செய்திகள்

ரெயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த ராணுவ வீரர் கைது
காட்பாடி அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் சிலிமிஷம் செய்த ராணுவவீரர் கைது செய்யபட்டு ஜெயிலில் அடைக்கபட்டார்.
வேலூர்:
மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் எஸ்14 முன்பதிவு பெட்டியில் சென்னையை சேர்ந்த இளம்பெண் பயணம் செய்தார்.
ரெயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த சென்னை பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் திடுக்கிட்ட இளம்பெண் அலறி கூச்சலிட்டார். உடனே உஷாரான பயணிகள் வாலிபரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த துஷ்யந்த் (வயது 24) என்பதும், ராணுவ வீரரான இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்கு செல்வதும் தெரியவந்தது. போலீசார் துஷ்யந்த்தை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Next Story