கடைகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் அதிகாரிகள் பங்கேற்றனர்
கடைகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காய்கறி மார்க்கெட், காந்தி ரோடு, மண்டி தெரு, பழைய புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி பாத்திர கடை மளிகை கடை நோட்டு புத்தக கடை உள்ளிட்ட கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் குபேரன் தலைமையில் கடைகளில் ஆய்வு செய்தனர்.

பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வியாபாரிகளிடம் வழங்கினர்.

இதில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு சீனிவாசன் பரமசிவம், துணை தாசில்தார் அய்யப்பன் ஆர்.ஐ. நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com