லாரி டிரைவர் திடீர் சாவு

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் தனியார் மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்
லாரி டிரைவர் திடீர் சாவு
Published on

வெம்பாக்கம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்குவாரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 9-ம் தேதி செய்யாறு அடுத்த சிப்காட் தொழிற்சாலையில் லாரியில் பொக்லைன் எந்திரத்தை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து வந்தார்.

சக்திவேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டார்.

பின்னர் லாரியில் படுத்திருந்தார். மறுநாள் காலை 10-ந் தேதி காலை அவர் மயங்கி கிடந்தார். அவரை சக ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். பின்னர் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com