என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Set the car on fire and burn it"

    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    முன்னாள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளராகவும், தலைமை கழக பேச்சாளராகவும் சாவல்பூண்டி சுந்தரேசன் இருந்து வந்தார். இவர் திருவண்ணாமலை வேட்டவலம் சாலை குன்றக்குடி அடிகளார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

    சுந்தரேசன் தனது மற்றொரு வீடான அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

    குன்றக்குடி அடிகளார் நகரில் உள்ள வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நேற்று மாலை வீட்டின் எதிரே அவரது கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சுந்தரேசனுக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரின் தீயை கட்டுப்படுத்தினர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சுந்தரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் வெள்ளை சட்டை மற்றும் பேண்ட் அணிந்த நபர் ஒருவர் காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார், எதற்காக தீ வைத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×