என் மலர்

  நீங்கள் தேடியது "Cut and steal iron pipes"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தனர்
  • கைது செய்து சிறையில் அடைத்தனர்

  ஆரணி:

  போளூர் அடுத்த துரிஞ்சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமாக ஆத்துவாம்பாடி பெரிய ஏரி பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

  இந்த நிலையில் நேற்று ஏழுமலை நிலத்திற்கு சென்றார். அப்போது வாலிபர்கள் 3 பேர் நிலத்திலிருந்து இரும்பு குழாய்களை அறுத்து திருடி கொண்டிருந்தனர்.

  இதனைக் கண்ட ஏழுமலை அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். வாலிபர்கள் ஏழுமலையை கண்டவுடன் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  போலீசார் வாலிபர்க ளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அன்பழகன் (வயது 28), சசிதரன், சதீஷ் (30) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  ×