என் மலர்
திருவள்ளூர்
- மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
- மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
திருவள்ளூர்:
பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.
இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி இருந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர்.
- லாரி டிரைவர்களான கவுதம், மாரிமுத்து, சதிஷ் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது.
போரூர்:
ராமாபுரம், ஆறுமுகம் நகர் விரிவு பகுதியில் நேற்று இரவு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான கவுதம், மாரிமுத்து, சதிஷ் என்பதும் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கவுதம் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
- கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார்.
திருவள்ளூர்:
பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.
இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
- எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
எண்ணூர், தாழங்குப்பம் உலக நாதபுரம் 6-வது தெருவில் மாநகராட்சி சார்பில் மழை நீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மாலை தரையில் இருந்து 10அடி வரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர்க் கால்வாயை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்கனவே பக்கவாட்டில் உள்ள 10 அடி உயரம் 20 அடி அகலமுள்ள பழைய மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
இதில் உள்ளே இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ், அம்ரேஷ் குமார் (வயது20) ஆகியோர் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தொழிலாளர்கள் 2 பேரையும் மீட்டனர்.
பலத்த காயம் அடைந்த அவர்களை ஸ்டான்லி அரசுஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை தொழிலாளி அம்ரேஷ் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு தொழிலாளி பிகாசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகராறில் நந்தியம்பாக்க த்தைச் சேர்ந்த காயத்திரி தரப்பினருக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- பொன்னேரி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் பொன்னேரி நகராட்சியில் 17-வது தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான காயத்திரி என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு மோதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தியம்பாக்க த்தைச் சேர்ந்த காயத்திரி தரப்பினருக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் திலீப் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் திலீப் பொன்னேரி கோர்ட்டில் சரண் அடை ந்தார். அவரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே தி.மு.க.கவுன்சிலர் இளங்கோ உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
- பாக்கியவதி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இரண்டு செல்போன்கள், பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கம் ஊராட்சி சாரதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் மோகன் ஆல்டிரின், தனியார் கம்பெனி பொறியாளர். இவரது மனைவி பாக்கியவதி. கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர்களது மகள் மாலையில் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
தகவல் அறிந்ததும் பாக்கியவதி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், இரண்டு செல்போன்கள், பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
- அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ராஜாஜிபுரம், விவேகானந்தர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மூலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ.2.10 லட்சம் அரசு மானியத்துடன் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி பெருமளவில் முறை கேட்டில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்கள் தமிழரசி, சுமித்ரா மற்றும் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நாராயணன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 3 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.
இந்த அலுவலகம் சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு மாற்றப்பட்டதில் கடந்த ஓராண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையையும் சேர்த்தால் 85 ஆயிரம் வீடுகளில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் 36 பேரில் 12 பேரிடம் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 7 ஆயிரத்து 856 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்களிடம் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
- வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொன்னேரி:
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். கோவிலை சுற்றி உள்ள நடைபாதை, சாலையோர கடைகளால் பக்தர்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கோவில் அருகே உள்ள நடைபாதை கடைகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி சாலையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. கடை முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது. புதிய வியாபாரிகள் அனுமதிக்க கூடாது. நடைபாதை வியாபாரிகள் விதிமுறைகளை கடை பிடிக்காவிட்டால் கோவில் அருகே இருபுறத்தில் உள்ள கடைகள் முழுவதும் அகற்றப்படும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீதும் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.
திருவொற்றியூர்:
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.
இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.
இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கும்பாபிஷேகம் ,கோவில் குளத்தை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளீஸ்வரர் லிங்கத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
பின்னர் அருகில் அருமந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.
அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் தகுதி அடிப்படையில் 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளியில் பயின்று சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைப்பு நிதி தொகை ரூ.520 கோடி உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அறநிலையத்துறை ஆணையர், குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன் பிரகாஷ் உடன் இருந்தனர்.
- மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
- கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகன் கவின் என்கிற தேவகுமார் (7) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதை தொடர்ந்து தேவகுமாரின் சகோதரி, எழில்இனியாவுக்கும் (2) காய்ச்சல் ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர், கொசு ஒழிப்பு பணியாளர்கள் காசிநாதபுரம் கிராமத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குனர் ஜவகர்லால், திருத்தணி தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரன், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணன் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காசிநாதபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் கிராமத்தில் நடந்து வரும் சுகாதார பணிகள் குறித்தும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
- தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
திருநின்றவூர்:
திருவள்ளூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக கண்காட்சி பெரும் வரவேற்பை பெற்றது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தககண்காட்சியில் ரூ.1 கோடியே 20லட்சத்துக்கு புத்தகம் விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆவடியில் பிரம்மாண்ட புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆவடி,எச்.பி.எப். மைதானத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்தக கண்காட்சியின் 'லோகோ' அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சி 'லோகோ' வை அறிமுகப்படுத்தினர்.இந்த புத்தக கண்காட்சி நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்காக கண்காட்சி நடைபெறும் மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தினமும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதி னருக்கும் ஏற்ற வகையில் ரூ. 10 முதல் ரூ.1000 வரை புத்தகங்கள் விற்பனைக்கு வைக்க உள்ளனர். அனைத்து புத்தகங்களுக்கும் புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புத்தக கண்காட்சியில் தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.






