என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிலத்தகராறில் தொழிலாளி கொலை: பொன்னேரி கோர்ட்டில் வாலிபர் சரண்
- தகராறில் நந்தியம்பாக்க த்தைச் சேர்ந்த காயத்திரி தரப்பினருக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- பொன்னேரி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் பொன்னேரி நகராட்சியில் 17-வது தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான காயத்திரி என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு மோதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தகராறில் நந்தியம்பாக்க த்தைச் சேர்ந்த காயத்திரி தரப்பினருக்கு ஆதரவாக வந்த பாலமுருகன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் திலீப் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் திலீப் பொன்னேரி கோர்ட்டில் சரண் அடை ந்தார். அவரை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே தி.மு.க.கவுன்சிலர் இளங்கோ உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.






