என் மலர்
திருப்பூர்
- பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில் விளைநிலங்களில் கிணறு மற்றும் போர்வெல் அமைத்து பல ஆயிரம் ெஹக்டேரில், நீண்ட கால பயிரான தென்னை மற்றும் இதர காய்கறி சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் பிரதான சாகுபடியாக தென்னை 18,252 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பரப்பு இந்த வட்டாரத்தில் அதிகமுள்ளது.
குறிப்பாக ஆண்டு முழுவதும் தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் சாகுபடியாகிறது. மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தக்காளி உற்பத்தியில் உடுமலை வட்டாரம் முன்னிலை வகிக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 171 ெஹக்டேர் பரப்பில் தக்காளி சாகுபடிக்கு நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் நடவு செய்துள்ளனர்.இவ்வாறு காய்கறி சாகுபடி ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியில் தற்போது படிப்படியாக பழப்பயிர் சாகுபடி பரப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.காய்கறி சாகுபடியில் நடவு, களையெடுத்தல், மருந்து தெளித்தல், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அறுவடை என தொழிலாளர்கள் தேவை அதிகமாகும்.
சீசன் சமயங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காமல் பல்வேறு பணிகள் பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
எனவே மாற்றி யோசிக்க துவங்கியுள்ள விவசாயிகள், தற்போது பழப்பயிர் சாகுபடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வகையில் உடுமலை வட்டாரத்தில் மா சாகுபடி, 690 ெஹக்டேர், மரநெல்லி 82.68, கொய்யா 31.38,சப்போட்டா 25.98, மாதுளை 2.69, எலுமிச்சை 10;48, பேரீட்சை 2.69 என 962 ெஹக்டேர் பழங்கள் உற்பத்திக்கான செடி மற்றும் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இச்சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பழப்பயிர் சாகுபடிக்கு தொழிலாளர் தேவை குறைவு. சொட்டு நீர் பாசனம் அமைத்துக்கொள்வதால் தண்ணீரை சிக்கனப்படுத்துவதுடன் எளிதாகவும் பாய்ச்சி க்கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளை உள்ளூரிலேயே ஏற்படுத்திக்கொடுத்தால் இன்னும் பழப்பயிர் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்றனர்.
உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், பழப்பயிர் சாகுபடியில், ஈடுபடும் விவசாயிகளுக்கு துறை சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
மேலும் அரசின் சிறப்புத்திட்டங்களின் கீழ் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணை வாயிலாக விவசாயிகளுக்கு நாற்றும் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்றார்.தென்னைக்கு மாற்றாக
பழப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டும் உடுமலை விவசாயிகள்
- வடகிழக்குப் பருவமழைக்காலங்களில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது
- உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைப்பில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், கரும்பு, தென்னை, வாழை மற்றும் காய்கறிப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.இதுதவிர மக்காச்சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இங்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைக்காலங்களில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர இறவைப் பாசனம் மற்றும் சொட்டுநீர்ப் பாசனத்திலும் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் மக்காச்சோளத்துக்கு கடந்த சில நாட்களாக சீரான விலை கிடைத்து வருவது குறித்து விவசாயிகள் கூறியதாவது
'மக்காச்சோள சாகுபடியைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக படைப்புழுக்கள் தாக்குதல் பெரிய அளவில் உள்ளது. எனவே படைப்புழுக்கள் கட்டுப்பாட்டுக்கென பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் உரம், ஆள் கூலி உள்ளிட்ட அனைத்தும் உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்திச்செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் மக்காச்சோளத்துக்கான தேவை உள்ளது. ஆனாலும் கோழித்தீவன உற்பத்தி நிறுவனங்கள் ஒடிசா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து மக்காச்சோளம் கொள்முதல் செய்வதால் உள்ளூரில் போதிய விலை கிடைக்காத நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் பிற மாநிலங்களில் மழையால் பாதிப்பு ஏற்பட்டு மக்காச்சோள வரத்து குறைந்துள்ளது. அத்துடன் தமிழகத்திலும் மக்காச்சோள சாகுபடி குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கடந்த காலங்களில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1,800-க்கும் குறைவாகவே விற்பனையான நிலையில் தற்போது ரூ.2,300-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இ-நாம் எனப்படும் மின்னணு வேளாண் சந்தை மூலம் இந்தியா முழுவதும் உள்ள வணிகர்களிடம் மக்காச்சோளம் விற்பனை செய்ய முடிகிறது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை குறைப்பில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகிறது. தென்மேற்குப்பருவமழை தொடங்கி, மக்காச்சோளம் சாகுபடி தொடங்கி, அறுவடைக்காலம் வரை வரத்து குறைவாகவே இருக்கும்.
எனவே இன்னும் சில மாதங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை என்று நம்பியுள்ளோம்' என்று விவசாயிகள் கூறினர்.
- அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
- புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அம்ருத் 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ. 36.44 கோடி மதிப்பீட்டில் நெருக்கடி மிகுந்த நகா்ப்புற வசிப்பிட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். 10 புதிய மேல்நிலை குடிநீா் தொட்டிகள், 142.17 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிப்பு, 16,462 குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவிலில் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீா் எடுப்பதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்து செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கழிவுகளை பாதுகாப்பற்ற வகையில் அப்புறப்படுத்துவது தொழிலாளா்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.
எனவே கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவா் தவிர மற்றவா்கள் வாகனத்தை இயக்கக் கூடாது.
விதிகளை மீறி இயக்கினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
- மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .
உடுமலை:
உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.
எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
- ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும்
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, சென்னை தலைமை தேர்தல்அலுவலர் - அரசு முதன்மை செயலர் கடிதத்துடன் வரப்பெற்ற கால அட்டவணையின் படி திருப்பூர் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 8 பெல் என்ஜினீயர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது.
முதல் நிலை சரிபார்ப்பு பணியின் ஒரு பகுதியாக மாதிரி வாக்குப்பதிவு 8.8.2023 மற்றும் 9.8.2023 ஆகிய இரு தினங்களில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
4.7.2023 அன்று திருப்பூர் மாவட்ட இருப்பு விபரம் 5698 பேலட் யூனிட் எந்திரங்களும், 3600 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும், 3876 விவிபேட் எந்திரங்களும் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி எப்எல்சி. ரிஜக்டடு எந்திரங்கள் 7 தினங்களுக்குள் பெங்களூர் பெல் நிறுவனத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் உடனிருந்தனர்.
- மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடைக்கு தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருகின்றனர்.
இந்தநிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் மதுபானக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்லடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன், நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், பொது மக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள இந்த மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளேன். மேலும் தமிழக அரசு 500 மதுபான கடைகளை அகற்றுவதாக அறிவித்து விட்டு வியாபாரம் குறைவாக உள்ள மதுபான கடைகளை மட்டுமே மூடி உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு எம்.எல்.ஏ.,காரை நோக்கி சென்ற போது அவரை சூழ்ந்து கொண்ட குடி மகன்கள் சிலர், மதுபான கடையை மூடக்கூடாது.நகரபகுதியில் இந்தக்கடை மட்டுமே உள்ளது. எனவே இங்கிருந்து மதுபான கடையை மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடிமகன்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் பணியாற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஆனந்த் சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில் பிரபு நல்லூர் போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்பு பட்டியலில் இருந்த விநாயகம் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த மகாலட்சுமி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- விபத்தில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது
- சிடிவி., கேமராவில் பதிவாகி அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் சிக்னலில் 2 தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேலும் விபத்தில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. நடுரோட்டில் கண்ணாடி துகள்கள் சிதறியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
அப்போது ராக்கியாபாளையம் சிக்னலில் பணியில் இருந்த தெற்கு போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை தனி ஆளாக நின்று அகற்றினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவருக்கு உதவி செய்து கண்ணாடி துகள்கள் அனைத்தையும் ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போக்குவரத்து போலீசாரின் இந்த செயல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி., கேமராவில் பதிவாகி அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.போக்குவரத்து போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
- பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
- போராட்டத்திற்கு அந்தப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிப்பாளையம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. பள்ளிக் குழந்தைகள், பெண்கள், அந்த வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிப்படுகின்றது. எனவே அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, பொதுமக்களின் கண்டனப் போராட்டத்திற்கு அந்தப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.மேலும் எம். எஸ் .எம் .ஆனந்தன் எம் .எல் .ஏ., அதிமுக., நிர்வாகிகள் , பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது
- மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் வழங்கினார்.
உடுமலை:
அ.தி.மு.க., பொன்விழா மாநாடு வரும் 20 ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் உடுமலை எம்எல்ஏ.வுமான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக., நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்தி கொடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும் மாநாட்டுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களுக்கான ஸ்டிக்கர் , சிறப்பு பாஸ்களையும் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., வழங்கினார்.
இதில் பல்லடம் முன்னாள் எம்எல்ஏ., கரைபுதூர் நடராஜன், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், மாவட்டக் இணை செயலாளர் சாஸ்திர சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ் ,முருகேசன், பிரனேஸ், பொள்ளாச்சி ஒன்றிய கழக செயலாளர் இளஞ்செழியன், ஆவல் பட்டி நட்ராஜ், சோமசுந்தரம், உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம், பல்லடம் நகர ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
பல்லடம்:
முன்னாள் முதல்வர் கருணாநிதி 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் 2 வது வார்டு பகுதியில், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான செ.ராஜசேகரன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவியாக துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் பல்லடம் நகர திமுக., செயலாளர் ராஜேந்திர குமார்,வார்டு செயலாளர்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கிருஷ்ணசாமி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ் குமார்,மற்றும் லாரி முருகசாமி, பரமசிவம், சிலம்பரசன், மற்றும் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






