என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் 2 கல்லூரி பேருந்துகள் மோதி விபத்து
    X

    விபத்தில் சிக்கிய கல்லூரி பேருந்துகளை படத்தில் காணலாம்.

    திருப்பூரில் 2 கல்லூரி பேருந்துகள் மோதி விபத்து

    • விபத்தில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது
    • சிடிவி., கேமராவில் பதிவாகி அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு ராக்கியாபாளையம் சிக்னலில் 2 தனியார் கல்லூரி பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். மேலும் விபத்தில் 2 பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. நடுரோட்டில் கண்ணாடி துகள்கள் சிதறியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

    அப்போது ராக்கியாபாளையம் சிக்னலில் பணியில் இருந்த தெற்கு போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை தனி ஆளாக நின்று அகற்றினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அவருக்கு உதவி செய்து கண்ணாடி துகள்கள் அனைத்தையும் ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    போக்குவரத்து போலீசாரின் இந்த செயல் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி., கேமராவில் பதிவாகி அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.போக்குவரத்து போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.

    Next Story
    ×