என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன்.
    • சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்து காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன் (வயது 43) .சம்பவத்தன்று இவர் தனது காரில் சேவூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவினாசி சேவூர் ரோடு சூளைப்பகுதியைச் சேர்ந்த பாலமுருளி என்பவர் சென்ற கார் மற்றும் கோவையைச் சேர்ந்த சஞ்சய் பாலு ஆகியோரது கார் மீதும் சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிலர் இரு சக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சேதுராமன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார்.
    • கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் இன்று காலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவர் மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க., கிளை தலைவராக உள்ளார்.

    நேற்றிரவு அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து செந்தில்குமார், மோகன்ராஜ் , அவரது தாயார் புஷ்பவதி(67), புஷ்பவதியின் சகோதரி ரத்தினம்மாள்(58) ஆகியோரை வெட்டியது. இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

    கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இதனால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த சரக்கு வேனுக்கு டிரைவராக நெல்லையை சேர்ந்த குட்டி என்ற வெங்கடேசன் பணியாற்றி வந்துள்ளார்.

    இந்தநிலையில் செந்தில்குமாருக்கும், வெங்கடேசனுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வெங்கடேசனை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். இந்த பிரச்சினை காரணமாகவும், வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையிலும் 4 பேர் கொலை நடந்தது தெரியவந்தது.

    இந்த வழக்கில் டிரைவர் வெங்கடேசனின் கூட்டாளி திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னசாமி மகன் செல்லமுத்து (24) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களும் இன்று காலை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொலையான மோகன்ராஜ் பா.ஜ.க. நிர்வாகி என்பதால் பா.ஜ.க., நிர்வாகிகள், தொண்டர்களும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர்.

    இதனால் பல்லடத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை கொலை செய்யப்பட்ட செந்தில்குமார், மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள், 4 பேர் உடல் பிரேத பரிசோதனைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கொலை நிகழ்ந்த பகுதியையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

    • மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்பாள் ஆகியோரும் அங்கு வந்தனர்.
    • டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார்.

    இவருடைய சித்தப்பா மகன் மோகன்ராஜ் (45). இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்போது திடீரென 3 பேர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவா்கள் திடீரென்று செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். இதனால் 'அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என்று செந்தில்குமார் அபயக்குரல் எழுப்பினார். அவருடைய சத்தம் கேட்டு பதற்றத்துடன் மோகன்ராஜ் அங்கு ஓடிவந்தார். அப்போது கொலையாளிகள் செந்தில்குமாரை வெட்டுவதை பார்த்து அவர் நெஞ்சம் பதைபதைத்தது. உடனே செந்தில்குமாரை காப்பாற்ற முயன்றார்.

    ஆனால் அதற்குள் அந்த நபர்கள் செந்தில்குமாரை வெட்டி வீழ்த்தினர். கொலையை தடுக்க முயன்ற மோகன்ராஜையும் கொடூரமாக வெட்டினர். இதனால் மோகன்ராஜும் அவர்களிடம் தப்பிக்க கூக்குரல் எழுப்பியவாறு தப்பிக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரையும் வெட்டி சாய்த்தது.

    இதற்கிடையில் மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்பாள் ஆகியோரும் அங்கு வந்தனர். கொலைவெறி அடங்காத அவர்கள் பெண்கள் என்றும் பாராமல் அவர்களையும் வெட்டினர். இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது.

    கொலையில் ஈடுபட்டவர்கள் வெறி கொண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. எனவே கை, கால்களை வெட்டி வீசி இருக்கலாம் என்று தெரிகிறது. தெரு முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது.

    இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் கொலையாளிகளை கைது செய்த பிறகு உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 உடல்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் பதற்றமும் அதிகரித்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    செந்தில்குமார் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்ததால் சரக்கு வேன் ஒன்றை வைத்திருந்தார். அந்த வேனுக்கு டிரைவராக ஒருவர் வேலை செய்துள்ளார். அந்த டிரைவரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை வேலையை விட்டு செந்தில்குமார் நிறுத்தினார். ஆனால் அந்த டிரைவர் வேலையை விட்டு நின்ற பிறகும் செந்தில்குமார் வீட்டிற்கு வரும் பாதையில் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமார் அவரை எச்சரித்து வேறு பகுதிக்கு சென்று மது அருந்துமாறு பலமுறை கூறியுள்ளார்.

    இந்த நிலையில் அந்த டிரைவரும், அவருடைய நண்பர்கள் 2 பேரும் நேற்று இரவு செந்தில்குமாரின் வீட்டிற்கு செல்லும் பாதையில் அமர்ந்து மதுகுடித்து உள்ளனர்.

    இதை பார்த்த செந்தில்குமார் அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் அங்கிருந்து போகாமல் செந்தில்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செந்தில்குமாரை வெட்டியுள்ளனர்.

    இவருடைய அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி மற்றும் ரத்தினாம்மாள் ஆகியோரையும் கொலை செய்து விட்டு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் தப்பி செல்லாதவாறு பல்லடத்தில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    எனவே கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

    இதனிடையே கொலையான 4 பேரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்
    • தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார்

    தாராபுரம் : 

    தாராபுரம் அடுத்த கள்ளிமந்தயம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) இவர் ஈரோட்டில் உள்ள தனியார் வங்கியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சென்னிமலையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்துள்ளார். அவர்கள் கொடுத்த ரூ. 3 லட்சத்தை வாங்கி கொண்டு ஒட்டன்சத்திரம் தாராபுரம் புறவழிச்சாலையில் பஸ்சில் பயணம் சென்று கொண்டிரு ந்தார். அப்போது பஸ் தனியார் ஓட்டல் முன்பு நின்றது. அப்போது மஞ்சப்பையில் வைத்து இருந்த ரூ.3 லட்சம் பணத்தை அங்கிருந்த ஒருவர் திருடி சென்றார். சிறிது நேரம் கழித்து பணத்தைப் பார்த்த போது பஸ்சின் மேல் புறத்தில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆடிட்டர் தாராபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
    • பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது,

     பல்லடம், செப்.3-

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி போலீஸ் சோதனை சாவடியில், காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

    இதையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிளில் சோதனை இட்டபோது அதில் செல்போன்கள் மற்றும் நகைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கருப்பன்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன் ராஜா (வயது 21) மற்றும் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டியை சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவரது மகன் ஜெபராஜ் (வயது 22) என்பதும் தெரியவந்தது.

    இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது, இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2.1/2பவுன் தங்கச் செயின், 1/4 பவுன் தங்க மோதிரம், மற்றும் 7 செல்போன்கள், மற்றும் கவரிங் நகைகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்
    • அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள புத்தரச்சல் காலனியை சேர்ந்த வஜ்ரவடிவேல் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் புத்தெரிச்சலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க ஓடிவந்த போது, அந்த வழியில் இருந்த ஒரு கிணற்றில் தவறி உள்ளே விழுந்து விட்டான். இதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் உள்ளே இறங்கி கயிறு மூலம் மாணவனின் உடலை மீட்டனர் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வாக்குச்சாவடிகள் பிரித்து புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது
    • 9 வாக்குச்சாவடிகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது

     திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பட்டியலை இறுதிப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    ஏற்கனவே தாராபுரம் தொகுதியில் 298 வாக்குச்சாவடிகள், காங்கயத்தில் 295 வாக்குச்சாவடிகள், அவினாசியில் 313 வாக்குச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 வாக்குச்சாவடிகள், உடுமலையில் 294, மடத்துக்குளத்தில் 287 வாக்குச்சாவடிகள் மற்றும் 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரித்து புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள், பல்லடத்தில் 2 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு தொகுதியில் 379 வாக்குச்சாவடிகள், பல்லடத்தில் 412 வாக்குச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 513 வாக்குச்சாவடிகளாக இருந்தது தற்போது 7 வாக்குச்சாவடிகள் உயர்ந்து, 2 ஆயிரத்து 520 வாக்குச்சாவடிகளாக அதிகரித்துள்ளது.

    இதுபோல் 37 வாக்குச்சாவடிகளின் கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது. 29 வாக்குச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 வாக்குச்சாவடிகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த பட்டியல் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு இறுதி செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
    • கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    உடுமலை : 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன. அது தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர்நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகிறது.

    இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை கடந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.

    பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக்கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதனால் திருமூர்த்தி அணை மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் போதிய நீர்வரத்து கிடைக்காமல் தவித்து வந்தது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதியில் இருந்து காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    அந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பாசனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் நீர் ஆதாரங்கள் நீர்வரத்தை இழந்து தவித்து வருகிறது. இதனால் அணையில் நீர்இருப்பு உயர்ந்த பின்பு 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
    • 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிக்கை தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது, குளிா்சாதனப் பெட்டிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி, தேங்காய் சட்னி, தயிா், மயோனிஷ், மோமோஸ் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.இது தொடா்பாக 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும் என்றும், திருப்பூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

    • பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்.
    • கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மாற்று பணி வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், 30 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 50 வயதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    இதைக் கண்டித்து, சிஐடியூ சங்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் வேலையை புறக்கணித்து திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார், நகராட்சி ஆணையா் ஆண்டவன், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணி, சிஐடியூ., நிா்வாகிகள் பாலசுப்பிரமணியம், ரங்கராஜ் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும், கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மாற்று பணி வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். 

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • 797 விவசாயிகள் தங்களுடைய 8,707 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.89 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 797 விவசாயிகள் தங்களுடைய 8,707 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மொத்த வரத்து 2,724 குவிண்டால்.திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.பருத்தி குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,619 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.89 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் 4-ந் தேதி நடக்கிறது.
    • அன்றைய தினம் காலை 9 மணி முதல் 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    திருப்பூர்:

    அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேலம்பாளையம், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் 4-ந் தேதி நடக்கிறது.

    எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் 4 மணிவரை பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், பொங்குபாளையம், காளம்பாளையம், பழையஊஞ்சப்பாளையம், புதுஊஞ்சபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல்லாத்துப்பாளையம், வ.அய்யம்பாளையம், ஆயிகவுண்டம்பாளையம், வேலூர், மகாராஜா கல்லூரி, எஸ்.எஸ்.நகர், வீதிக்காடு, முட்டியங்கிணறு, திருமலைநகர், பெ.அய்யம்பாளையம் ஒருபகுதி, கணக்கம்பாளையம் சிட்கோ,

    ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம் புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.வி.பி. லேஅவுட், போயம் பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன் நகர், நஞ்சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர்,பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் பகுதிகளில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×