அவினாசியில் மோதி விட்டு நிற்காமல் சென்ற கார்- பரபரப்பு

காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன்.சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவினாசி : 

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்து காவுத்தம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருபவர் சேதுராமன் (வயது 43) .சம்பவத்தன்று இவர் தனது காரில் சேவூர் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவினாசி சேவூர் ரோடு சூளைப்பகுதியைச் சேர்ந்த பாலமுருளி என்பவர் சென்ற கார் மற்றும் கோவையைச் சேர்ந்த சஞ்சய் பாலு ஆகியோரது கார் மீதும் சேதுராமன் ஓட்டி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிலர் இரு சக்கர வாகனத்தில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் சேதுராமன் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவினாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com