search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப்பணியாளா்கள் போராட்டம்
    X

     போராட்டத்தில் ஈடுபட்டவா்களை படத்தில் காணலாம்.

    திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப்பணியாளா்கள் போராட்டம்

    • பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்.
    • கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மாற்று பணி வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும்.

    அவிநாசி:

    அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், 30 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது ஒப்பந்ததாரா் மூலம் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 50 வயதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள், கொசு ஒழிப்புப் பணியாளா்கள் என 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

    இதைக் கண்டித்து, சிஐடியூ சங்கம் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள் வேலையை புறக்கணித்து திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு உணவு சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார், நகராட்சி ஆணையா் ஆண்டவன், நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணி, சிஐடியூ., நிா்வாகிகள் பாலசுப்பிரமணியம், ரங்கராஜ் உள்ளிட்டோா் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும், கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு மாற்று பணி வழங்குவது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    Next Story
    ×