என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூர் பெரு–மாள் கோவில் அரு–கில் உள்ள பூ மார்க்–கெட்–டில் கடந்த 2 நாட்களாகவே பூக்கள் வியாபாரம் சூடுபிடித்தது.
    • ஆயுதபூஜை கூட்ட நெரிசலையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    ஆயுத பூஜை பண்டிகை நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் திருப்பூர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பூஜைப்பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் கடந்த 2 நாட்களாகவே பூக்கள் வியாபாரம் சூடுபிடித்தது. இன்று காைல முதல் பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. இதேபோல் பெருமாள் கோவில் வீதி, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட மாநகரின் பல இடங்களில் சாைலயோரத்தில் பொரி, கடலை, பூஜை ெபாருட்கள், வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மாவிலை, குருத்தோலை தோரணம், தேங்காய், பூசணிக்காய், பூ மாலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பனியன் நிறுவனத்தினர் வாழைக்கன்றுகள், அலங்கார பொருட்கள், மற்றும் பூக்களை மொத்தமாக வாங்கி சென்றனர். கடை வீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வந்ததால் மாநகரில் வாகனப்போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இதேபோல் பழ வகைகளின் விற்பனையும் அதிகமாக இருந்தது.கடைகள் மற்றும் ஆங்காங்கே தள்ளுவண்டிகளில் வாழைப்பழங்கள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் பூ, பழங்கள் மற்றும் பூஜைபொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது. குறிப்பாக பூக்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக அளவில் வந்தனர். பெருமாள் கோவில் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்த நிலையில் அவர்களின் வாகனங்கள் மார்க்கெட்டின் முன்பாக உள்ள ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தன.

    ஏற்கனவே ரோட்டின் மற்றொரு பக்கத்தில் தள்ளுவண்டிகளில் பழம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை நடந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டதால் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் இடமின்றி அவர்களும் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் திருப்பூர் பல்லடம் ரோட்டில் அதிக அளவிலான வாகனங்கள் செல்வதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.குறிப்பாக பண்டிகை நாட்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆயுதபூஜை கூட்ட நெரிசலையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டனர்.  

    • சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது.
    • சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன

    அவிநாசி:

    பழமை வாய்ந்ததும், திருப்பூா் மாவட்டத்திலேயே தனி சன்னிதியாய் நரசிம்மருக்கு இடதுபுறம் மகாலட்சுமி நின்ற நிலையில் அருள்பாலிக்கும் சிறப்புக்குரியதும், சா்ப்ப விநாயகா் விற்றிருக்கும் தலமாகவும் தாளக்கரை லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோவில் விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள இக்கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 23-ந் தேதி தொடங்கி 5 வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வோரு வாரம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தினா் உபயதாரா்களாக பங்கேற்று சிறப்பு பூஜைகளும், இரவு உற்சவமும் நடைபெற்றது.

    இதேபோல மேலத் திருப்பதி எனப் போற்றப்படும், சேவூா் அருகேயுள்ள மொண்டிபாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா செப்டம்பா் 16-ந் தேதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு வாரந்தோறும் சிறப்பு பூஜைகள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் பிரசித்தி பெற்ற இரு கோவில்களிலும் இந்த வாரம் சனிக்கிழமையுடன் புரட்டாசி திருவிழா நிறைவு பெற்றது. 

    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

    திருப்பூர்:

    இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. காவல்துறை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட பிரிவுகளில் தேசத்தை பாதுகாக்கும் வகையில் வீரமரணம் அடைந்த 254 காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் நினைவு தூண் அமைக்கப்பட்டது.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமை தாங்கி வீரவணக்கம் செலுத்தினார். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், போலீஸ் துணை கமிஷனர்கள் அபிஷேக் குப்தா (வடக்கு), வனிதா (தெற்கு), ஆசைத்தம்பி (தலைமையிடம்), மநகர கூடுதல் துணை கமிஷனர்கள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர்கள் வானத்தை நோக்கி மூன்று முறை 48 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்கம் அடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு டாப்சிலிப்பில் யானைகள் முகாம், குரங்கு நீர்வீழ்ச்சி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விடுதிக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் டாப்சிலிப், சேத்துமடை, அட்டக்கட்டி, சிறுகுன்றா ஆகிய பகுதிகளில் வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் 39 தங்கும் விடுதிகள் தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து அறைகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. மானாம்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முடிந்ததும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கினார்.

    தாராபுரம்

    கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தளவாய்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டரசம் பாளையத்தில் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். பொன்னாபுரம் வட்டார மருத்துவர் தேன்மொழி வரவேற்றார்.

    அப்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாமை தொடங்கி வைத்து 10 கர்ப்பிணிகளுக்கான ஊட்டசத்து பெட்டகம், மற்றும் மக்களை தேடி மருத்துவத்தில் 10-பேருக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

    மேலும் முகாமில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் அங்கன்வாடி மையம் சார்பில் காய்கறிகள் கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு பார்த்தார். தளவாய் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் முகாமில் 300 பெண்கள் உள்பட 750 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் நவீன் நன்றி கூறினார்.

    • ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும்.
    • உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விழிப்புணா்வு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமை தாங்கி பேசியதாவது:-

    ஓட்டல் உாிமையாளா்கள் ஆண்டுதோறும் உரிமம் அல்லது பதிவுசான்றை புதுப்பிக்க வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் மற்றும் உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும். அனைத்து ஓட்டல்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் பயிற்சி பெற்றவர் பணியில் இருக்க வேண்டும். ஓட்டல்களில் சமையல் அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகிக்காமல் பயோ-டீசல் உற்பத்திக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவுப்பொருட்களில் நிறமி சேர்க்க கூடாது. பழங்களை செயற்கை வகையில் பழுக்க வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மருத்துவ செலவிற்காக பணம் கேட்டபோது ருக்குமணி, தனது வீட்டில் பணம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சிவசக்தி காலனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் லிங்கேஸ்வரன். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தாயார் ருக்குமணி, தாராபுரம் -பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகர் பகுதியில் கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் ருக்குமணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். சிகிச்சைக்காக மகள் வீட்டுக்கு சென்ற நிலையில், மருத்துவ செலவிற்காக பணம் கேட்டபோது ருக்குமணி, தனது வீட்டில் பணம் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். உடனே லிங்கேஸ்வரன், தனது தாயார் வீட்டுக்கு அதிகாலை சுமார் 3 மணி அளவில் சென்றுள்ளார்.

    இந்நிலையில் தாயாரின் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென லிங்கேஸ்வரனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். மேலும் வீட்டிற்குள் திருட முயற்சி செய்வதற்காக சென்ற தாராபுரம் சங்கர் மில் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் தாராபுரம் அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் ஆகிய இருவரும் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

    வெளியே நின்று கொண்டிருந்த குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, லிங்கேஸ்வரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தார். கத்தியினால் கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.

    பின்னர் திருமூர்த்தி மற்றும் அப்துல் ரகுமான், தினேஷ்குமார் ஆகிய மூவரும் லிங்கேஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர். உடனே இச்சம்பவம் குறித்து லிங்கேஸ்வரன், தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு தேடிய போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அப்துல் ரகுமான் பகலில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராகவும், இரவில் திருடனாகவும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தாராபுரம் குற்றவியல் நீதிபதி பாபு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2023-24-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி செயல்படுத்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
    • விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இத்திட்டத்தின் மூலம் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும்.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டுக்கான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் ராபி செயல்படுத்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

    ராபி பருவத்தில் நெல்-2, மக்காசோளம்-3, கொண்டைக்கடலை, நிலக்கடலை மற்றும் சோளம் போன்ற அறிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

    கடன் பெறா விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் முன் இத்திட்டத்தின் மூலம் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ தொடர்பு கொள்ளலாம்.

    பயிர் காப்பீடு பீரிமியம் தொகையாக நவம்பர் 15-ந் தேதிக்குள் ஏக்கருக்கு நெற்பயிருக்கு ரூ.562.5 தொகையும், நவம்பர் 30-ந் தேதிக்குள் மக்காச்சோளத்துக்கு ரூ.535.43 தொகையும், கொண்டக்கடலைக்கு ரூ.210 தொகையும், டிசம்பர் 15-ந் தேதிக்குள் சோளத்துக்கு ரூ.46.30 தொகையும், டிசம்பர் 31-ந் தேதிக்குள் நிலக்கடலைக்கு ரூ.472.50 தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

    இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    திருப்பூர்

    சென்னை சென்ட்ரல்-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சேலத்துக்கு மாலை 5.58 மணிக்கு வந்த ரெயில் இனி 5.48 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.47 மணிக்கு வந்த ரெயில் இனி 6.37 மணிக்கும், திருப்பூருக்கு 7.25 மணிக்கு வந்த ரெயில் இனி 7.18 மணிக்கும் வந்து செல்லும்.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் . கிராமத்தின் அருகே ஜக்கம் பாளையம் குட்டிய கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இப்பகுதியில் திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தினமும் 60 ஆயிரம் லிட்டர் வரை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் காலப்போக்கில் 30 ஆயிரம் லிட்டர் ஆக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 27 நாட்களாக இப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.ஊராட்சி தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் ஒன்றிய அதிகாரிகளிடம் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதை அடுத்து ஆண்டிகவுண்டனூர் பகுதி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராத நிலையில் பொதுமக்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.

    • முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

    உடுமலை:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை கோட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் ஊராட்சி குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 1086 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு மேலாண்மைக்கான விருதுகளும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திகேயன்,பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி,பத்மா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வி. ஜெயராமன் கூறியதாவது:-

    உடுமலை கோட்டத்தில் மொத்தம் 60 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 20 முகாம்கள் வீதம் 2024 ம் ஆண்டு மார்ச் வரை நடைபெற உள்ளது.முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விபரம் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.முகாமில் சிகிச்சை, மலடு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தாது உப்பு, வெறி நோய் தடுப்பூசி மற்றும் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் முதலிய சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு கால்நடை மருத்துவ சுகாதார விழிப்புணர்வு முகாமுக்கு கால்நடைகளை கொண்டு வந்து மேற்படி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

    • உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
    • கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

    உடுமலை:

    உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் கடந்த 18 ந்தேதி முதல் இன்று வரை நடைபெறுகிறது. உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வாரம் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் சுமார் 400 மாணவிகள் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பிரிவிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்கின்றனர்.நேற்று நடைபெற்ற 9-ம்,10 ம் வகுப்பிற்கான போட்டிகளில் மொத்தமாக 74 மாணவிகள் பங்கேற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் ப. விஜயா ஆலோசனையின் பேரில் தமிழ் ஆசிரியர்கள் வே.சின்னராசு,ஆர். ராஜேந்திரன், ஆசிரியை வை.விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.கலைத்திருவிழாவில் பங்கேற்கும் மாணவிகள் சாலையில் திரளாக சென்றதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனர்.

    ×